அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரமாக மான்ஹட்டனில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்களை குறிக்கும் விதமாக கடந்த 2005 ஆம் ஆண்டில் தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றிற்காக ஓவியம் டொனால்ட் டிரம்ப்பால் வரையப்பட்டது. எனினும், இந்த ...
Read More »குமரன்
சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 39 அவுஸ்ரேலிய வீரர்கள் பலி!
சோமாலியாவில் அமைதிப்படையைச் சேர்ந்த அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியாவில் அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவுடன் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவத்துடன் இணைந்து ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்பிரிக்க யூனியன் ராணுவத்தில் 22 ஆயிரம் அவுஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவுஸ்ரேலிய ராணுவத்துக்கு எதிராக நேற்று அல்ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மொகாடிசு அருகே ...
Read More »படப்பிடிப்பின்போது பிரபல நடிகர் மஞ்சு விஷ்ணு படுகாயம்
மலேசியாவில், படப்பிடிப்பின்போது பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு படுகாயம் அடைந்தார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மஞ்சு விஷ்ணு நடிக்கும் ‘அச்சாரி அமெரிக்கா யாத்ரா’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இதன் ஒரு காட்சிக்காக கோலாலம்பூர் நகர சாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வது போன்று படம் பிடிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவருடைய மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கியவாறு கீழே விழுந்தது. இதில் மஞ்சு விஷ்ணு படுகாயம் அடைந்தார். இதையடுத்து ...
Read More »நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவ நபருக்கு கொடுத்த உணவுப் பொதியில் ரெஸ்ரர்!
நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த உணவுப்பொதியில் இருந்து மின்சாரக் கடத்தலைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ’ரெஸ்ரர்’, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயந்தனின் மனைவி சிறைச்சாலை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். நல்லூர் கோயில் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார். இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் ...
Read More »வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்!
நான் பறந்து கொண்டேயிருப்பேன் நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன் நான் பிறந்தேன் நற்பண்புகளுடன் நான் பிறந்தேன் கனவுடன் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன் நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன் நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன். தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன். – மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை வலியுறுத்த அமரர் அப்துல் கலாம் கூறிய கவிதை
Read More »இயக்குநர் சங்க தேர்தலுக்கான வாக்குப் பதிவு
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கெல்லாம் முடிவுகள் ...
Read More »மோட்டோ X4: விலை மற்றும் முழு தகவல்கள்
மோட்டோரோலாவின் புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் கசிந்துள்ளது. புதிய X4 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X4 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. இதன் விலை ட்விட்டரில் ரோலாண்ட் குவாண்ட் என்ற டிப்ஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. குவாண்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய மோட்டோ X4 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 350 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் ...
Read More »அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டம்! சதி முறியடிப்பு!
அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் சிட்னியின் புறநகரான சர்ரி ஹில்ஸ், லகெம்பா, விலேபார்க் மற்றும் பஞ்ச்பவுல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகப்படும் நிலையில் இருந்த 4 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். ...
Read More »விடுதலைப்புலிகளின் சொத்துகள் மீதான தடை தொடரும்: ஐரோப்பிய யூனியன்
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கினாலும், அந்த இயக்கத்தின் சொத்துகள் மீதான தடை தொடரும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்து உள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பை, பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து கடந்த 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இயக்கத்தின் சொத்துகளும் முடக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் லக்சம்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கோர்ட்டில் (நீதிக்கான ஐரோப்பிய கோர்ட்டு) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ...
Read More »குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்!
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் சார்லிக்காக பிரார்த்தனையும் வேண்டுதல்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைமை தொடர்பில் கடுமையாக பல நீதிமன்றங்களில் போராடிய பெற்றோர் இறுதியில் தங்களது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். 11 மாத சிசுவான சார்லி கார்ட்டின் உயிர் பிரிந்து விட்டதாக அவரது பெற்றோர்களான Connie Yates மற்றும் Chris Gard உருக்கமாக தெரிவித்துள்ளனர். Great Ormond Street மருத்துவ மனையுடன் மிக நீண்ட அடிப்படையிலான ஓர் சட்டப் ...
Read More »