அவுஸ்ரேலியாவில் விமானம் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சிட்னியின் புறநகரான சர்ரி ஹில்ஸ், லகெம்பா, விலேபார்க் மற்றும் பஞ்ச்பவுல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகப்படும் நிலையில் இருந்த 4 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தை தரையில் மோத செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.அதைத் தொடர்ந்து 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன்மூலம் தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.