குமரன்

யார் இந்த கேஜ்ரிவால்?

2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கேஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 3-ம் முறையாக அவர் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். ஹரியாணாவில் ஒரு நடுத்தரப் பொறியாளரின் குடும்பத்தில் 1968-ம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். கோரக்பூரில் உள்ள ஐஐடியில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் ஜாம்ஷெட்பூரில் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர் அரசுப் பணித் தேர்வுக்குத் தயாரானதால் தனியார் பணியை விட்டு விலகினார். கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வசித்த அவர் அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், ராமகிருஷ்ணா மடம் ...

Read More »

ஆஸ்கர் விருதுகள் 2020: ஜோக்கர் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகர்!

ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா   பிரமாண்டமாக நடைபெறுகிறது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon ...

Read More »

கரோனா வைரஸால் சர்வதேச மொபைல் கூட்டம் பாதிப்பு!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள சர்வதேச மொபைல் கூட்டம் கரோனா வைரஸ் பீதியால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி மொபைல் துறைக்கான உலகின் மிகப்பெரிய கண்காட்சியாகக் கருதப்படுகிறது. இதில் மொபைல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு நிறுவனங்கள், வல்லுநர்கள் பங்கேற்பார்கள். பல புதிய மொபைல் மாடல்களும், எதிர்காலத் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும். இந்த வருடம், இந்தக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஆரம்பித்து 27 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆனால், கரோனா வைரஸ் பீதியால் ஏற்கெனவே ...

Read More »

பொதுத் தேர்தலுக்கு பின்னர் தெரிவாகும் தமிழர் பிரதிநிதிகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதானால் தமிழர்களுக்காக பேசக் கூடிய பொறுப்புள்ள பிரதிநிதிகள் எமக்குத் தேவை. ;அதனால் பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் தமிழர்களினால் தெரிவு செய்யப்படக் கூடிய பிரதிநிதிகளுடன் எதிர்காலம் குறித்து பேச வருமாறு கேட்போம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது சனியன்று டில்லியில் வைத்து ‘ ...

Read More »

பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர். ‘மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே’, ‘தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா’, ‘நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம்’, ‘பாலியல் கல்வி என்பது ...

Read More »

சர்வதேச விமானங்களை ஈர்ப்பதற்கான வேலைத்திட்டம்!

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார். இந்த வேலைத் திட்டத்திற்கு உரிய பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை ...

Read More »

கொரோனா வைரஸ் – ஆயிரத்தை தாண்டிய பலி!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில், நேற்றுவரை ...

Read More »

சிறிலங்காவில் 172 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான சோதனை!

சிறிலங்காவில் சீனப் பெண் மாத்திரம் கொரோன தொற்றுக்குள்ளனதாகவும், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீரா, இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனப் பெண் எப்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற உறுதியான திகதி இன்னும் தீர்மனிக்கப்படவில்லை. இந் நிலையில் நாடு முழுவதும் 172 பேர் கொரோனா தொற்றுக்கிலக்கான சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் ...

Read More »

ஆஸ்கர் 2020 – 4 விருதுகளை அள்ளியது பாராசைட்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான ‘பாராசைட்’ நான்கு விருதுகளை அள்ளியது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை ...

Read More »

சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

சிறிலங்கா  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் இன்று 10.02.2020 நண்பகல் ஆளுனர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ...

Read More »