அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 27 ஆம் திகதி தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் நிகழ்வு “ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கத்தினரால்” நடாத்தப்பட்டது.
Read More »குமரன்
கருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதி!
ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை ...
Read More »விரைவில் திருமணம் – காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். காஜல் அகர்வாலுக்கு 34 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் ...
Read More »வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள் !
வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் இறைமை மக்களுக்குரியது. அதாவது இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அந்த இறைமை அதிகாரத்தை உதாசீனப்படுத்த முடியாது, மக்களே அதனை அனுபவித்தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறைமையை அனுபவிப்பதற்கான ஓர் அணுகுமுறையாக வாக்குரிமை கூறப்பட்டுள்ளது. எனவே வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கையில் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத் ...
Read More »ஆஸ்திரேலியாவில் 50 பேர் கைது!
ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச சுரங்க வள மாநாட்டை எதிர்த்து போராடிய பருவநிலை ஆர்வலர்கள் 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள பருவநிலை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் பற்றிய விளைவுகள் குறித்து விளக்கினார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பருவ நிலை மாற்ற போராட்டங்கள் ...
Read More »பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்திகதி 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு என கருதி சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலை மோசம் ...
Read More »சாரதிகளை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய காவல் துறைக்கு அதிகாரம்!
மக்கள் கூட்டத்திற்குள் காரை வேகமாக ஓட்டி வந்து அசம்பாவித செயலில் ஈடுபட முயன்றால், அந்த வாகனத்தின் சாரதிகளை சுட்டுக்கொல்ல காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, காரை வேகமாக ஓட்டி வந்து மக்கள் மீது மோதச் செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், காவல் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் மெல்போர்னில் ...
Read More »தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகள் மகாநாயக்கர்களிடம்?
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை, நாளை மறுநாள் கண்டியில் வெளியிடப்படும் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், கண்டியில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும், சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய தலைவர் அவர் என்றும், லக்ஸ்மன் ...
Read More »மரண தண்டனைக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்திற்கு முன் உயர்நீதிமன்றம் மரணதண்டனை அமுலாக்கத்திற்கு இடமளித்தால் மரணதண்டனையை நிறைவேற்றிவிட்டு செல்வேனென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »அடுத்த பெரும் உலக சாதனை: கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்!
கேட் மெட்ஸ் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களால் கணக்கிட முடியாத வேகத்தில் கணக்கிடும் குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருப்பது அறிவியல் உலகைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1980-களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் இரவு பகலாக ஆராய்ந்துவரும் விஷயத்தில் கூகுள் எட்டியிருக்கும் சாதனை இது. செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபாட்டுகள் தயாரிப்பில் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் மிகப் பெரிய அளவில் பயன்படவிருக்கிறது. இதன் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: பாரம்பரியமான கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal