குமரன்

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப்

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். கிம் எழுதிய கடிதத்தை (ஜூலை ஆறு தேதியிட்டது) வெளியிட்டுள்ள டிரம்ப் ”மிகவும் அருமையான குறிப்பு இது ” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த வரலாற்று உச்சிமாநாட்டில் இரு நாட்டுத்தலைவர்களும் விவாதித்தவற்றில் அடிப்படை விஷயமான, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் ...

Read More »

புத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் – சம்பந்தன்

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை அடைந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போதே எதிரக்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருவருக்கும் இடையில் ...

Read More »

வைரமுத்துவை வாழ்த்துவோம்! – இன்று வைரமுத்து பிறந்தநாள்!

திறமை இருந்தால் ஜெயிக்கலாம். ஆனால் திறமை மட்டுமே போதுமா என்ன? உழைப்பும் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் வெற்றிக்கு மிக மிக அவசியம். உழைத்தால் ஜெயிக்கலாம் என்பதற்கான உதாரணங்களில் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. உழைப்பு, ஜெயித்தல் என்றெல்லாம் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் வடுகப்பட்டிக்காரரின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சொல்லவேண்டும். சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். அதிலும் புதுமையாகவும் நளினமாகவும் சொல்லவேண்டும். இந்தப் பாட்டரசன் வைரமுத்துவின் பேனா, நவீன மையால் நிரப்பப்பட்டு நிரப்பப்பட்டு, காலி செய்யப்பட்டு, நிரப்பிக்கொண்டே இருக்கிற உழைப்புத் தேனி அவருடையது! ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  இந்தியாவுடன் அடைந்த தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் நாங்கள் மீண்டும் நாங்கள் விளையாட முடியுமா என்ற தொனியில் மைக்கேல் வாகன் இந்தப் பதிவையிட்டிருக்கிறார். நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் 6 விக்கெட்டுகளில் 268 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோட் ...

Read More »

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை திரட்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினர் சேகரித்து வருகின்றனர். மருத்துவமனைகள் , வீடுகளில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தகவல் சேகரிப்பதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை. அது தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவரங்கனிடம் கேட்ட போது, குறித்த விபரங்களை தருமாறு எமது அமைச்சிடம் கோரி இருந்தார்கள். அதனை வழங்க எமக்கு அனுமதியில்லை. அது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு ...

Read More »

அருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை!

சிறுவர்கள் சிக்கித்தவித்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின் தைரியமான மீட்பு பணிகளை திரைப்படமாகவும் எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read More »

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த அண்ணன்!

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றுவதற்காக சகோதரன் தனது உயிரை பணயம் வைத்து இறந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஜோன் எட்வேட்ஸ் என்ற நபர் தனது மகனையும் மகளையும் சுட்டுக்கொன்ற சம்பவம் சிட்னியில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 15 வயது ஜக் எட்வேட்ஸ் தனது தந்தையின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து சகோதரியை காப்பற்றுவதற்காக உயிர்விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. தந்தை துப்பாக்கியுடன் தாயின் வீட்டிற்கு வந்த வேளை சிறுவன் தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான். ...

Read More »

தனிகட்சி தொடங்கும் எண்ணமில்லை!- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட  சிறிலங்காவிற்கான  கனடா தூதுவர் டேவிட் மைக்கனுடான சந்திப்பின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது கட்சி என்னை நியமிக்காவிடின் வீட்டிற்கு செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணைவேன், இல்லாவிடில் ஒரு கட்சியை அமைக்க முடியும் என நான் தெரிவித்திருந்ததில் மூன்றாவது விடயத்தை மாத்திரம் ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸை மனச்சாட்சியுடன் செயற்பட அனுமதித்துள்ளனரா என்பது ...

Read More »

விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும்! – நவீன் திஸாநாயக்க

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே மேற்கண்ட ...

Read More »

வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்!

உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு, விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ...

Read More »