தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிறிலங்காவிற்கான கனடா தூதுவர் டேவிட் மைக்கனுடான சந்திப்பின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனது கட்சி என்னை நியமிக்காவிடின் வீட்டிற்கு செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணைவேன், இல்லாவிடில் ஒரு கட்சியை அமைக்க முடியும் என நான் தெரிவித்திருந்ததில் மூன்றாவது விடயத்தை மாத்திரம் ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸை மனச்சாட்சியுடன் செயற்பட அனுமதித்துள்ளனரா என்பது எனக்கு தெரியவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலம்போன பின்னரே இந்த அலுவலகத்தின் வெற்றி தோல்விகள் குறித்து தெரிவிக்க முடியும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.