நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்ற ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக சிறிய தீவு நாடான நவ்ரூவில் அமைந்துள்ள தடுப்பு காவல் முகாம்களில்தான் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள அடைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »குமரன்
ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி?
அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. ...
Read More »பாங்காக்கில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு!
பாங்காக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் ...
Read More »மனித முக அமைப்பில் 3டி மாஸ்க்குகள்- ஜப்பான் நிறுவனம் அரிய கண்டுபிடிப்பு!
ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 3டி வடிவமைப்பில் தயாரித்துள்ள மனித முக அமைப்பின் மாஸ்க்குகள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி மாஸ்க்குகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்கை மாஸ்க்குகள் குறித்து ரியல்-எப் நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா கூறியதாவது: இதுவரை ...
Read More »தமிழர்களுக்கு எப்போது சுந்திரம்?
சிறிலங்கா 71 சுதந்திர தினமான இன்று கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலைச் செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்கு, சர்வதேச விசாரணை வேண்டும், நிலங்களை ஆக்கிரமிக்காதே, இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கை பிரிக்காதே, ஒற்றையாட்சி வேண்டாம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும் கொலையாளிகளை நீதிபதியாக்கும் 30/1 தீர்மானத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுத்து நீதியை இழுத்தடிக்காது ஜநா பாதுகாப்புச் ...
Read More »பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள்!
சிறிலங்கா சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கருநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய பல அரசியல் கட்சிகளும் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரி நாள் என்றும் வடக்கு கிழக்கில் போராட்டங்களை நடாத்தும் மக்களுடன் தாமும் இன்று இணைந்து போராட்டங்களை நடாத்துவதாகவும் அறிவித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும் கறுப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
Read More »சர்வதேச உறவுகளுக்கான நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ள மகிந்த!
எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கு சர்வதேச உறவுகளுக்கான நிலையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். சிறிலங்கா அதன் சர்வதேச உறவுகளை எவ்வாறு சிறந்தமுறையில் வலுப்படுத்துவது என்பது தொடர்பில் கற்கைநெறிகளையும் ஆராய்ச்சிகளையும் சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையம் நடத்தும் என்று எதிர்க்கட்சி தலைவரின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். நிலையத்தின் செயலாளராக ஜானக நிமலச்சந்திர நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறிலங்காவின் இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் மனதிற்கொண்டு பிராந்தியத்தில் உள்ள பங்காளர்கள் ...
Read More »கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள்!
தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித்தமை பற்றி ...
Read More »விமான நிலையத்தை புகைப்படம் எடுத்த நால்வர் கைது!
ட்ரோன் கமராவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை புகைப்படம் பிடித்தமைக்கா நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் மாலைத்தீவை நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த காவல் துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வௌ்ளப் பெருக்கு!
அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் இன்று எதிர்வு கூறியுள்ளனர். கரையோர நகரமான டவுன்ஸ்வில்லேயில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிராந்தியத்தில் பருவப் பெயர்ச்சி மழை கடும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Townsville பகுதியில் 150 மில்லிமீற்றர் தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ...
Read More »