சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘பேய் மாமா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிலகாலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு ...
Read More »குமரன்
இறங்குமுகம்! – பி.மாணிக்கவாசகம்
அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டம் ஒரு சந்தியில் வந்து தேக்க நிலையை அடைந்துள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்த ஓர் அரசியல் போராட்டத்தின் இந்த நிலைமை கவலைக்குரியது. பல வடிவங்களில் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ள இந்தப் போராட்டத்தைப் பலதரப்பட்ட தலைவர்கள், பல்வேறு நிலைகளில் பல்வேறு வழிமுறைகளில் வழிநடத்தியிருக்கின்றார்கள். அந்த வழிநடத்தல்களும்சரி, முன்னேற்றமும்சரி, போராட்டத்தின் இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்பதற்கு உற்சாகமூட்டுவதாக அமையவில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்டத்தின் இலக்கு மாறவில்லை. கொள்கையில் மாற்றமில்லை என்ற போராட்டத்தின் இருப்பு குறித்த இறுமாப்பான குரல்கள் ...
Read More »சிறிதரன் வழியில் அங்கஜனது குழுவும் அடாவடி!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குச் சொந்தமான கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தினரால் இன்றும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கேபிள் ரி.விக்கான மின்கம்பங்கள் நாட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது அவற்றினை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த ஊடகவியலாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டடுள்ளார். அவரை அச்சுறுத்தும் வகையில் குறித்த மின்கம்பங்களை நாட்டிக்கொண்டிருந்தவர்கள் காணொளி பதிவுகளும் மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கேபிள் ரி.விக்கான கம்பங்கள் நாட்டப்பட்ட ...
Read More »பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு!
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்போராட்டம் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்காக அணி திரளுமாறு பொது அமைப்புகள் மற்றும் மதகுருமாரை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளதுடன், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான ...
Read More »விக்னேஷ் சிவனின் கனவும், ரசிகர்களின் அறிவுரையும்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய கனவு பற்றி பதிவிட்ட கருத்துக்கு ரசிகர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள். 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளின. இந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டு இருக்கிறார். ஆஸ்கர் விருது அரங்கிற்குள் செல்வதற்கான கதவு அருகே நின்றபடி ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், தனக்கும் ஒருநாள் ...
Read More »அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை!
அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்வதை வடகொரியா நிறுத்தி வைத்தது. எனினும் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் வகையில் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட ...
Read More »அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்!
பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல் (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார். தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது கிறிக்கெட்பயிற்றுவிப்பாளரால் தன்னையும் அழைத்து வியையாடச் செய்தமையால் கிறிக்கெட்டில் பங்கேற்கும் சந்தர்பம் ஏற்பட்டது என்றார். ...
Read More »தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன?
மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கின்ற நிலையில், அந்த இடத்தை இம்முறை பிரித்தானியா நிரப்பவுள்ளது. அது எவ்வாறான பிரேரணையாக அமைந்திருக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி? 2015 செப்டம்பரில் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ...
Read More »ஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா?
நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூறுவதுதான். இவ்வாறு நிலைமாறுகால நீதியை இலங்கைத்தீவில் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு 2015செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களை ...
Read More »அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! சொத்துக்கள் பல சேதம்!
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேலும் அழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அந்நாட்டு அவசரகால சேவைகள் மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தென்கிழக்கு மெல்போர்ன் பகுதியில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டேட் பார்க் பகுதியில் பாரிய தீப்பரவல் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விக்டோரியா மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவல் ...
Read More »