உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் – என ஆய்வில் தெரியவந்து உள்ளது. தி லான்ஸெட் ஆன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளது அதில் கூறி இருப்பதாவது:- உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது மற்றும் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43வது இடத்திலும் , பிரிட்டன் 23வது இடத்திலும், சீனா 140வது மற்றும் இந்தியா 118 வது இடத்திலும் ...
Read More »குமரன்
நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி !நொதர்ன் பவர் ரூ. 20 மில். நட்டஈடு!
சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு, சுன்னாகம் நொதர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்துக்கு, உயர் நீதிமன்றம் இன்று (04) தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலரான, பேராசிரியர் ரவீந்திர காரிவசம் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கே, இன்றைய தினம், மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த நொதர்ன் பவர் தனியார் மின்னுற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக, நிலக்கீழ் நீரில், எண்ணெய், கிரீஸ் போன்ற கழிவுகள் கலக்கப்பட்டதால், குறித்த பிரதேச ...
Read More »ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி டனியா மல்லெட் காலமானார்!
1964ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பாண்ட் கோல்ட் பிங்கர் படத்தின் நாயகி டனியா மல்லெட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் – நடிகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது. கய்ஹமில்டன் இயக்கினார். இதில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார். ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட். இந்த படத்துக்கு பிறகு பெரிய படங்களில் அவர் ...
Read More »டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வைரஸ் நிறைந்த பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் விசாரித்தனர். அந்தப்பெண் உள்ளே நீச்சல் குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவரது கைகளில் எவ்வித நீச்சல் உடைகளும் ...
Read More »நீதியில்லையேல் நிரந்தர சமாதானமில்லை!
இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பொதுச்சபையில் உரையாற்றுகையில் ஜெரமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையில் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் காணப்பட்டதை விட நல்லநிலை காணப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் எனினும் இடம்பெற்ற தவறுகளிற்காக நீதி வழங்கப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என அமைச்சர் தெரிவித்துள்ளார் இதேவேளை பொதுச்சபையில் உரையாற்றியவேளை ஆசிய பசுவிக்கிற்கான பிரிட்டனின் அமைச்சர் ...
Read More »விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்!
தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார். அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார். வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் ...
Read More »விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வுப் பணிகள்!
விடுதலைப் புலிகள் அமைப்பினர் வசமிருந்த, பெருந்தொகையான தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் ‘ஈழம் வங்கி’ குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தற்போது முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்துக்கு உரித்துடைய குறித்த இடத்தில், காவல் துறை உத்தரவைப் பெற்று, அகழ்வுப் ...
Read More »வித்தியாசமான கதாபாத்திரத்தில் விவேக்!
விவேக் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவர் அளித்துள்ள பேட்டி: டிரைலர் பார்க்கும்போது காவல் துறை வேடம் போல தெரிகிறதே? அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற ...
Read More »அவுஸ்திரேலியாவில் கடுமையாக்கப்படும் புதிய சட்டம்!
அவுஸ்திரேலியா, சமூக ஊடக நிறுவனங்களுக்கான கடுமையான புதிய சட்டங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான பதிவேற்றங்களை உடனடியாக அகற்றத் தவறும் நிறுவனங்களைச் சேர்ந்தோருக்கு சிறை, பில்லியன் டாலர் அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம். நிறுவன ஊழியர்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். சமூக ஊடக நிறுவனங்கள், அவற்றின் வருடாந்தர மொத்த வருமானத்தில் 10 விழுக்காட்டை அபராதமாக செலுத்த நேரிடலாம். வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான பதிவேற்றங்கள் எவ்வளவு விரைவாக அகற்றப்பட்டன என்பதன் அடிப்படையில் நீதிமன்ற விசாரணைக் குழு தண்டனையை ...
Read More »அலுகோசு பதவிக்கு பட்டதாரி!
அலுகோசு பதவி வெற்றிடத்துக்காக இன்று (02) இடம்பெற்ற, நேர்முகப்பரீட்சையில், பட்டதாரி ஒருவர் தோற்றியிருந்தாரென, சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு 39 பேர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், 19 பேரை தோற்றியிருந்தனரெனவும், இவர்கள் க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களென, சிறைச்சாலை தலைமையக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பதவிக்கான ஆகக் குறைந்த கல்வித் தகைமை, க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்திப்பெற்று, அவற்றில் 2 திறமைச் சித்திகளை கொண்டிருப்பதே ஆகும்.
Read More »