குமரன்

குண்டு தயா­ரித்த இன்­சாபின் ஊழி­யர்­க­ளுக்கு பிணை கிடைத்­தது எப்­படி?

சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் இன்சாப் அஹ­மட்­டுக்கு சொந்­த­மான, குண்டு தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் இடங்­களில் ஒன்­றான வெல்­லம்­பிட்டி செப்பு தொழிற்­சா­லையில் சேவை­யாற்­றிய நிலையில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஊழி­யர்கள் 9 பேருக்கு பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் காவல் துறை  தலை­மை­ய­கத்தின் எஸ்.ஐ.யூ. எனப்­படும் விஷேட விசா­ரணைப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. குறித்த ஒன்­பது பேரும்  வெல்­லம்­பிட்டி காவல் துறை  ஊடாக மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் போது ஏற்­பட்ட தவ­றுகள் அல்­லது சரி­யான முறையில் விட­யங்­களை ...

Read More »

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனடா சென்றார் ஆசியா பீவி!

மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி, நாட்டை விட்டு வெளியேறி கனடாவிற்கு சென்றுள்ளார். பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை ...

Read More »

மனிதர்களை போல நடக்கும் ரோபோ!

மனிதர்கள் குறுகலான பாதையில் நடக்கும் போது நிதானமாக செல்வதை போல, ரோபோ ஒன்று முதன்முறையாக குறுகலான பாதையில் பேலன்ஸ் செய்து நடைபயிற்சி மேற்கொள்ளும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது.  பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வல்லுனர்களின் முயற்சி சினிமாவில் பல முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் அவ்வபோது கிடைத்து ...

Read More »

ஆஸ்ரேலியப் பிரதமர் மீது முட்டை வீச்சு!

ஆஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. நேற்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது மக்களுடன் நின்று சந்தித்துக்கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் பின்பக்கமாக வந்து பிரதமரின் தலையில் முட்டையை வீசியுள்ளார். முட்டையை வீசிய பெண்ணைப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். முட்டை வீசிய இளம் பெண் ஓடும் போதும் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கி பிடிக்கும் முயற்சியில் வயோதிப் பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். விழுந்த வயோதிபப் பெண்ணை பிரதமர் ஸ்கூட் மொரிசன் எழுப்பி ...

Read More »

எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு!

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த கல்லறை தோட்டத்தில் அந்த கால மன்னராட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய் கா மற்றும் நிவை ஆகிய இருவரின் கல்லறைகள் உள்பட பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் ...

Read More »

பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி!

தமிழர்களுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, தமிழர்கள் தலை நிமிர்வதால் கன்னடர்கள் பீதி அடைவதாக கூறினார். ராஜ்குமார் இயக்கத்தில் ‌ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:- ‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ...

Read More »

காதலியை மனித வெடிகுண்டாக மாற்றிய கொடூரம்!

இலங்கையில் காதலித்த பெண்ணை மனித வெடிகுண்டாக மாற்றி, தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலை 8 தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்தியிருந்தனர். அந்த மனித வெடிகுண்டுகளின் படங்களை சமீபத்தில் இலங்கை ராணுவத்தினர் வெளியிட்டனர். அந்த படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற இந்து பெண்ணின் படமும் இடம் பெற்றிருந்தது. புலஸ்தினி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேத்தாத் தீவு என்ற ...

Read More »

ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்!

ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக  முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான். திருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில்  ...

Read More »

கொச்சிக்கடை தேவாலயம் இன்று திறக்கப்படும் ​!

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்படுவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணிவரை ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர். எனவே தேவாலயத்துக்கு வருகைத் தருபவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

குப்பையிலிருந்து இராணுவச் சீருடை மீட்பு!

ஹட்டனில் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலக்கூடத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில், இராணுவத்தினரின் சீருடையொன்று இன்று (07) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பேருந்து தரிப்பிட அலுவலகத்துக்கு சிலர் தகவல் வழங்கியதையடுத்து, அலுவலக அதிகாரிகள் காவல் துறைக்கு அறிவித்திருந்த நிலையில், அங்கு விரைந்த காவல் துறை குறித்த பொதியை சோதனையிட்ட போது, அதிலிருந்து இராணுவத்தினரின் சீருடை​யொன்று மீட்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் காவவல் துறையினர்  மேலும் தெரிவித்தனர்.

Read More »