குமரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்!

அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 4.30 மணியிலிருந்து மாலை 6.30மணிக்கு மெல்பேர்ண் மொவுண்வேவளி அல்வி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்து கொள்ளலாம்!  

Read More »

48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு!

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அதுபோலவே இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்படும். சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் ...

Read More »

நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்!

நைஜீரியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ...

Read More »

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி நிறுத்தம்!

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி ஆலய நிர்வாக சபையினர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தமது ஆவணங்களை சமர்பித்தன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆலயத்திற்கு சொந்தமான காணி மற்றும் அங்கு தொல் பொருள் திணைக்களத்துடன் தொடர்வுடையதாக கூறப்பட்ட கற்துாண் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்ட தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் குச்சவெளி பொலிஸார் ஆகியோர் தமக்கு குச்சவெளியில் உள்ள இன்னுமொரு தொல் பொருள் ...

Read More »

இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே ...

Read More »

நான்கு கமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்!

நான்கு பிரைமரி கமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. இதில் 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ...

Read More »

ஒரு நாள், ஒரு காடு, சில பறவைகள்! சுப்பிரமணியத்துடன் ஒரு பயணம்

D-750 நிக்கான் கேமரா, 500 ஜூம் லென்ஸ், கூடவே கேமரா ஸ்டேண்ட். தூக்க முடியாத பையை தூக்கிக் கொண்டு அதிகாலையிலேயே தன்னந்தனியாகவே கிளம்பி விடுகிறார். ‘உடன் வருகிறேன்!’ என்றபோது அவ்வளவு சுலபமாய் அவர் சம்மதிக்கவில்லை. சில குறிப்பிட்ட நாட்களில் ‘கூப்பிடுகிறேன்!’ என சொல்லி போக்குக் காட்டிவிட்டு தொடர்ந்து கல்தா கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு முறை மிகவும் வற்புறுத்திய பிறகு, ‘இல்லண்ணா, நான் எங்கே போனாலும் தனியா போறதுதான் வழக்கம். பறவை மட்டுமில்லண்ணா, சிறுத்தை, புலி, மர அணில், செந்நாய்னு ஏகப்பட்டது சுத்தற இடம். நம்மால ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 7 பெண்கள் கொலை!

8 நாட்களில் 7 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 3ம் திகதி Nicole Cartwright என்ற 32 வயதுப் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் இவரது உடல் சிட்னி பூங்கா ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. அதேபோன்று அன்றைய தினம் விக்டோரியாவில் 46 வயதான Gayle Potter என்ற 3 பிள்ளைகளின் தாய் தனது முன்னாள் கணவனால் காரால் மோதி கொல்லப்பட்டதாக தெரியவந்தது. அதேநேரம் Northern Territory இல் 29 வயதுப்பெண் ஒருவரும் குடும்ப வன்முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 4ம் திகதி விக்டோரியாவின் ...

Read More »

விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு!

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கான அங்கிகாரம் மெல்ல மெல்லக் கீழிறங்கத் தொடங்கிவிடும். அதையே, தமிழ்த் ...

Read More »

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி மூன்றாவது நாளாக நடை பயணம் தொடர்கிறது!

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று ...

Read More »