குமரன்

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது

அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான். அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி கூறிய சத்யாகிரகி ஒருவருக்கு ...

Read More »

நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும் ! மறுத்தால் போராட்டம்!

“30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும். எனவே அரசு இந்தத் தடைகளை அகற்றவேண்டும். இதற்கான, கோரிக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன். திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டமை, சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட ...

Read More »

பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது. நீட் தேர்வு அச்சத்தால்  தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். ...

Read More »

சாதனை படைத்த விஜய்யின் செல்பி

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் சாதனை படைத்துள்ளது.  லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிவ்மோகா, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக நெய்வேலியில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதுதான், விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது. இதன் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு விஜய் அழைத்து வரப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருமானவரிச் சோதனை முடிந்த பின்னர், விஜய் மீண்டும் நெய்வேலியில் ...

Read More »

பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது

பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தங்கள் சமூகத்திற்காக அதிகாரப்பகிர்வு குறித்து பேசுகின்ற ஒவ்வொருவரையும் பிரிவினைவாதியாக பார்க்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது சந்தர்ப்பம் கிடைத்தால் தீவிரவாதிகளாக பட்டம் சூட்டப்படுகின்ற சூழலிலேயே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபகதலைவர் மறைந்த எம்.எச்.எம்  அஷ்ரபின்20வது நினைவுநாள் நிகழ்வு மூதூரில் இடம்பெற்றவேளை அங்கு உரையாற்றுகையில் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ...

Read More »

மாவை அழைத்த கூட்டத்தில் முன்னணி கலந்துகொள்ளாது

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு சில தமிழ்க் கட்சிகள் கலந்துகொள்ளாது எனத் தெரிகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாது என அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இதற்கான அழைப்பு தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான நிலையில் தாம் எவ்வாறு கலந்துகொள்வது? எனவும்  அவர் தெரிவித்தார். இதேவேளையில், சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விநியோகஸ்த்தர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது இன்று காலை வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரை வாளால் வெட்டிய கும்பல் ஒன்று அவரது கைக்கடிகாரம், பணப் பை, மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கைப்பற்றிச் சென்றிருக்கின்றது. இன்றுகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில்கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் (43) என்பவரே காயமடைந்தவராவார். சுன்னாக  காவல் துறை   இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

கொரோனாவினால் ஆஸ்திரேலியா திரும்ப முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவுக்குள் வாரம் 4,000 வெளிநாட்டு வருகைகளை மட்டுமே அனுமதிப்பது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்றி, விசாயின்றி, முறையான மருத்துவ வசதியின்றி நாட்டுக்கும் திரும்ப முடியாமல் ஆயிரகக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் ஒன்பதாவது வலிமையான கடவுச்சீட்டை அவர்கள், தங்கள் (ஆஸ்திரேலிய) அரசு கொரோனா பெருந்தொற்று சூழலில் கைவிட்டு விட்டதாக கவலைத் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்நோக்கியிருந்த நிலையில், வாரம் 4 ஆயிரத்திற்கு குறைவான வருகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும என்ற கட்டுப்பாட்டை கடந்த ...

Read More »

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு ...

Read More »

பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்

சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கார்மென் ரெய்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களாக முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ...

Read More »