குமரன்

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை…

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலையில் உள்ள அரசியல்வாதிகள் உருவாக்குகின்ற கதை இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் காய்கறிகளிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளிற்கு இரண்டுமாதங்களிற்குள் தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து உரக்கப்பல் வந்தவேளை பிரச்சினை எழுந்தது அதன் காரணமாகவே கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் தராதரத்தின் கீழு; உரம் மீள உற்பத்தி செய்யப்பட்டு எங்களிற்கு விநியோகிக்கப்படும் அதற்கு நாங்கள் பணத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்?

கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. அவர்கள் எங்கே போனார்கள் யாரை கண்டார்கள் போன்ற விபரங்கள் ஏற்கனவே செய்திகளாக வந்துவிட்டன. இச்செய்திகளுக்கு அப்பால் இதுபோன்ற விஜயங்களின் ராஜதந்திர இலக்குகளை-diplomatic objectives-உய்த்துணரும் விதத்தில் அண்மைக்கால சம்பவங்கள் சிலவற்றை தொகுத்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் பெருந்தொற்று நோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். எனினும் அவர் வடக்கிற்கு வருகைதந்த காலகட்டம் எதுவென்று பார்த்தால் ...

Read More »

NSW மாநிலத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தல்!

NSW மாநிலத்தில் சமூகப்பரவல் மூலம் புதிதாக 2501 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் தொற்று காரணமாக எவரும் மரணமடையவில்லை. NSW மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து அங்கு முகக்கவச கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. எனினும் மாநில Premier Dominic Perrottet இக்கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. புதிய Omicron திரிபு அதிகளவில் பரவும்தன்மை கொண்டதாக இருப்பதால்,  அவசர நடவடிக்கை தேவை என Westmead மருத்துவமனையின் immunologist Dan Suan தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2024/25 இல் 1.4 சதவீதமாக உயரும் எனவும், 2021/22 இல் வெறும் 0.3 சதவீதமாகவே ...

Read More »

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் 2021-ம் ஆண்டு வரி தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக மாறுவார் எனத் தெரிகிறது. உலகின் ப ணக்காரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.2.11 லட்சம் கோடி. எலான் மஸ்க் நடத்தும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி டாலர்களாகும். இதில் 1400 கோடி டாலர்களை எலான் மஸ்க் தன்வசம் வைத்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் எலான் மக்ஸ் ஏறக்குறைய ...

Read More »

அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகை ஐஸ்வர்யா ராய்

மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்’ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் இந்தியாவை சேர்ந்த அரசியல் சினிமா, தொழில், மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஐநூருக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது. நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பிரிட்டனுக்கு சொந்தமான வெர்ஜியன் தீவில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் அமிதாப்பின் மருமகளும் ...

Read More »

வைத்தியர்கள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கை  ரீதியில் நாளை (21) காலை 08 மணி தொடக்கம் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் ஐந்து மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சிறிலங்கா ஜனாதிபதியின் விசேட பணிப்புரை

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  மற்றும்  நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு விடுக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ பணிப்புரை விடுத்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காக இருவரும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், மத்திய வங்கி ஆளுநர் ...

Read More »

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க இந்தியாவும் மேற்கும் சதி!

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கி, சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயல்கின்றன. இதற்காகவே அவற்றின் எடுபிடிகளான சட்டத்தரணிகளும், தங்களைத் தாங்களே மூத்த அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்களும் தாங்களே நிராகரித்த 13ஐ இப்போது – 30 வருடங்களின் பின்னர் கேட்கிறார்கள். – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை ...

Read More »

நான் நடிகராக மாற அவர்கள் படம்தான் காரணம் – நானி

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் நானி, ஷியாம் சிங்கா ராய் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார். தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தமிழ், ...

Read More »

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் தடை- வடகொரியா அதிரடி உத்தரவு

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் 11 நாட்கள் தடை விதித்து வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் ...

Read More »