எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு விடுக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காக இருவரும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், மத்திய வங்கி ஆளுநர் அந்தச் செய்தியை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal