உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக மாறுவார் எனத் தெரிகிறது.
உலகின் ப ணக்காரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.2.11 லட்சம் கோடி. எலான் மஸ்க் நடத்தும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி டாலர்களாகும். இதில் 1400 கோடி டாலர்களை எலான் மஸ்க் தன்வசம் வைத்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் எலான் மக்ஸ் ஏறக்குறைய 1200 கோடி டாலர் வரை வரி செலுத்தலாம் எனத் தெரிகிறது. முதல்கட்ட கணிப்பில் இந்த ஆண்டுக்குள் 1,100 கோடி டாலர் (ரூ.83,469 கோடி) வரியாகச் செலுத்துவார் எனத் தெரியவந்துள்ளது. இது உத்தேச மதிப்புதான் என்றாலும், வரி செலுத்தும் மதிப்பு 1200 கோடி டாலரை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின பங்குகள் பங்குச்சந்தையில் சக்கைபோடு போடுவதால்தான் வருமானம் மஸ்க்கிற்கு கொட்டுகிறது. ஒருவேளை இந்த ஆண்டு எலான் மஸ்க் 1200 கோடி டாலர் வரி செலுத்தினால், அது அமெரிக்காவில் உள்துறைக்கு மிகப்பெரிய அளவில் வருவாயாக இருக்கும்.
கடந்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எலிசபெத் வாரன் கடுமையாக மஸ்க்கை சாடினார்.அதில், “எலான் மஸ்க், மக்களுக்கு இலவசமாக உதவி செய்து வரிச்சலுகை பெறுவதை நிறுத்திவிட்டு அரசுக்கு முறையாக வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் “ 2021ம் ஆண்டு பாருங்கள் அமெரிக்காவில் இதுவரை யாரும் செலுத்தாத தொகையை நான் வரியாகச் செலுத்துவேன்” எனத் தெரிவித்தார்.
ப்ரோ பப்ளிக்கா எனும் புலனாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், “எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் குறைவாகவே வரி செலுத்துகிறார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை 45.50 கோடி டாலர்கள் மட்டுமே வரியாகச் செலுத்தியுள்ளார். ஆனால், அவரின் சொத்து இடைப்பட்ட காலத்தில் 13900 கோடி வளர்ந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு எந்த வரியும் மஸ்க் அமெரிக்க அரசுக்கு செலுத்தவில்லை” எனத் தெரிவி்த்துள்ளது