NSW மாநிலத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தல்!
- NSW மாநிலத்தில் சமூகப்பரவல் மூலம் புதிதாக 2501 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் தொற்று காரணமாக எவரும் மரணமடையவில்லை.
- NSW மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து அங்கு முகக்கவச கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. எனினும் மாநில Premier Dominic Perrottet இக்கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.
- புதிய Omicron திரிபு அதிகளவில் பரவும்தன்மை கொண்டதாக இருப்பதால், அவசர நடவடிக்கை தேவை என Westmead மருத்துவமனையின் immunologist Dan Suan தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2024/25 இல் 1.4 சதவீதமாக உயரும் எனவும், 2021/22 இல் வெறும் 0.3 சதவீதமாகவே இது இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
- தொற்றுநோய் பரவலுக்கு முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1.5 மில்லியன் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் இரு மடங்காக அதிகரித்து வருவதால், ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை “கணிசமான அளவு அதிகரிக்கும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.
ஆசிரியர்தெரிவு 2021-12-20