குமரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி. இதனைத் தான் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறி வந்தார்கள். ஆனால் தேர்தலின் பின்னர் அவர்கள் ஒற்றையாட்சி, 13ஆவது திருத்தச் சட்டமென்று அரசாங்கம் ...

Read More »

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி!

அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து மிகப் பாரிய ஆயுத ஏற்றுமதியாளராக முடியும் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூலோபாய இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது தர்க்க ரீதியானது. ஆயுதங்கள் தேவைப்படும் நாடுகள் அவற்றைப் பிற நாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதை விட தாமே அவற்றை உற்பத்தி செய்வதானது செலவு குறைந்தது. அத்துடன் தேவைக்கு மேலதிகமான ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பது இலாபத்தை ...

Read More »

கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய தவித்த அவுஸ்ரேலிய சிறுவன்

சிலந்தி அளவிலான கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய சிறுவன் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை சாம் கனிசே (16) , மெல்போர்னின் பிரைட்டன் கடலில் கால்களை நனைத்த பிறகு, அவரது கால்களிலும் கணுக்கால்களிலும் ரத்தம் வழிந்துள்ளது. “போரில் அடிப்பட்டது போல” தன் மகன் வீட்டுக்கு வந்ததாகக் கூறும் சாம்மின் தந்தை ஜரோட் கனிசே, அவனது கால்களில் இருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை என்கிறார். சதையை உண்ணும் பூச்சியை கண்டறிவதற்காக, நிபுணர்களின் கருத்துக்களை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கான இலவச யோகா பயிற்சி!

அகதிகளுக்கும் போரின் வேதனையிலிருந்து விடுபட விரும்புவோருக்கும் இலவச யோகா பயிற்சி வழங்கும் ஹேக்னி யோகா திட்டத்தினை இலண்டனில் பார்த்ததிலிருந்து, அவுஸ்ரேலியாவிலும் அப்படியான ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதென்று முடிவெடுத்துக் கொண்ட,  அவுஸ்ரேலிய  பெண்மணி டேனியல் ஃபெக் (Danielle Begg) அதைச் செயலிலும் காட்டிக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் டேனியல் ஃபெக் அவர்களின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்டுவரும் இலவச அகதிகள் யோகா திட்டத்தில் கற்றுக்கொடுக்கப்படும் யோகக்கலை குறித்த சில காணொளிகளை கீழே காணலாம். இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள http://www.refugeeyogaproject.com/ என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.

Read More »

பிக் பாஸுக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளிவரும் படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா, விஷ்ணு விஷாலின் ஜோடியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி – பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. ...

Read More »

சிட்னியில் இருந்து துபாய் நோக்கி பயணமான கப்பல்!

Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 1,900 பயணிகளுடன் Sea Princess எனும் சொகுசு கப்பல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் நோக்கி பயணமாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த கப்பலானது இந்திய பெருங்கடல், அரேபிய கடல், ஏடன் வளைகுடா மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக பயணம் மேற்கொண்டபோது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்காமல் இருக்க கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.   குறித்த பகுதிகள் ...

Read More »

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த அவுஸ்ரேலியர்!

அவுஸ்ரேலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயம் தொடர்பான பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக agoraphobia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பொது இடங்களைக் கண்டால் இவருக்கு ஒருவித பயம் வந்துவிடும். இந்த இடம் ஆபத்தானது, பாதுகாப்பு இல்லாதது, விரைவாக வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று தோன்றும். வீட்டிலிருந்து 2 நிமிட தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு செல்லும்போது, 23-வது வயதில் முதல் முறையாக இந்தப் பயம் ...

Read More »

தடுமாற்றத்தை தடுக்கும் காலணி!

வயதானவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க கை தடிகளை பயன்படுத்துவார்கள். அதற்கு பதிலான அணிந்திருக்கும் காலணியே சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமான காலணியை உருவாக்கியுள்ளனர். இந்த காலணியின் அடிப்பகுதியில் பற்சக்கரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. தடுமாறும் நேரத்தில் தானாகவே உடல் சமநிலையை இந்த காலணி ஏற்படுத்தி தரும்.

Read More »

‘அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தினார்!

சண்டை காட்சிகளில் ‘அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தினார்’ என்று `விவேகம்’ படத்தில் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவரான சர்ஜ் கூறியிருக்கிறார். அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ...

Read More »

சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவோம் – அவுஸ்ரேலியா

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பி அனுப்பப்பட்ட 13 பேரும், அண்மைய நாட்களில், கடலில் இடைமறிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ‘குடியுரிமை பெறாத இவர்கள் அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்களல்ல. அவுஸ்ரேலியாவில் சட்டரீதியாக தங்கியிருக்க தகுதியற்றவர்கள். சட்டரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்ய முனையும் எவரும், அவுஸ்ரேலியாவில் ...

Read More »