குமரன்

ஒரு நல்ல ஆன்மாவை எந்த குற்றாச்சாட்டும் வெல்ல முடியாது!

கங்கணா ரணவத் சர்ச்சையில், நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான், ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை கங்கணா ரணவத்துக்கும், ஹ்ரித்திக் ரோஷனுக்கும் இடையே கடந்த வருடம் முதலே பிரச்சினை நிலவி வருகிறது. அப்போது கங்கணா அளித்த பேட்டி ஒன்றில், ஹ்ரித்திக்கை அற்பத்தனமான முன்னாள் காதலர் என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இருவர் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கணா, தங்களுக்குள் இருந்த உறவு முடிந்ததால் ஹ்ரித்திக் தனக்கு தந்த மன உளைச்சலுக்கு, பொதுவில் ...

Read More »

கைக்குள் அடங்கும் திரையரங்கம்!

மொபைல் போன் மூலம், பெரிய திரை அனுபவத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியுமா? ‘ஸ்மார்ட் பீம்’ லேசர் புரோஜக்டர் இருந்தால் முடியும். கைக்குள் அடங்கிவிடும் இந்த திரைப்படக் கருவி, லேசர் கதிர் மூலம், சுவர் அல்லது திரை மீது படம் காட்டும். மொபைல் போனில் சேமிக்கப்பட்ட படங்கள் அல்லது இணையம் வழியே, ‘ஸ்ட்ரீம்’ செய்யப்படும் படங்களை, வீட்டிலேயே பெரிய திரைப்படமாக பார்ப்பதற்கு, ‘ஸ்மார்ட் பீம்’ கருவி உதவும். இப்போது, சமீபத்தில் வெளியான படங்கள் கூட, இணைய சேவைகள் வழியே கட்டணத்திற்கு கிடைப்பதால், குடும்பத்தினர், நண்பர்கள் ...

Read More »

சியோமியின் டூயல் கமரா ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்ற பெருமையும் கொண்டுள்ளது. புதிய சியோமி Mi A1 ஸ்மார்ட்போனின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட், பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் ...

Read More »

விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி!

நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு சென்று கொண்டிருக்கையில், விஷாலுக்கே வில்லியாக மாறியிருக்கிறாராம் வரலட்சுமி. லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. விஷால் – மீரா ஜாஸ்மின் – ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!

இந்தியா- அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னையில் நடைபெறுகிறது. வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியா- அவுஸ்ரேலியா ...

Read More »

ஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. கன்பராவில், நேற்று நடந்த நிகழ்வில், அவுஸ்ரேலியாவின் சார்பில் குடிவரவு மற்றும் எல்லா பாதுகாப்பு திணைக்களத்தின் செயலர் மைக்கேல் பெசுலோவும், சிறிலங்காவின் தரப்பில் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஆட்கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்கும், ஆட்கடத்தல் முறைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இடைமறித்தல் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை விசாரணை செய்வதற்கும், இந்த உடன்பாடு வழிசெய்கிறது. ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!

கார் மோதி 24 வார சிசு இறந்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செவிலியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அவுஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த டிம்பில் கிரேஷ் தாமஸ் (வயது 32) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் அஷ்லேயா ஆலன் என்ற கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 24 வார கரு கலைந்தது. கிரேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிம்மிற்கு சென்று விட்டு வீட்டிற்கு ...

Read More »

அவுஸ். 377/9; 72 ரன்கள் முன்னிலை

வார்னர் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது. வங்காள தேசம் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 305 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 விக்கெட்டுக்கள் அள்ளினார். பின்னர் அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ...

Read More »

20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவு!

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பதாக இணங்கியதை அடுத்து, நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சட்டமா அதிபர் ...

Read More »

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் பிள்ளையார்!

ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுள்கள் மற்றும் இறை தூதர்கள், விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக அமைந்துள்ளது. இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. இருப்பினும் அனைத்து ...

Read More »