மொபைல் போன் மூலம், பெரிய திரை அனுபவத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியுமா? ‘ஸ்மார்ட் பீம்’ லேசர் புரோஜக்டர் இருந்தால் முடியும். கைக்குள் அடங்கிவிடும் இந்த திரைப்படக் கருவி, லேசர் கதிர் மூலம், சுவர் அல்லது திரை மீது படம் காட்டும்.
மொபைல் போனில் சேமிக்கப்பட்ட படங்கள் அல்லது இணையம் வழியே, ‘ஸ்ட்ரீம்’ செய்யப்படும் படங்களை, வீட்டிலேயே பெரிய திரைப்படமாக பார்ப்பதற்கு, ‘ஸ்மார்ட் பீம்’ கருவி உதவும். இப்போது, சமீபத்தில் வெளியான படங்கள் கூட, இணைய சேவைகள் வழியே கட்டணத்திற்கு கிடைப்பதால், குடும்பத்தினர், நண்பர்கள் சேர்ந்து வீட்டிலேயே படம் பார்ப்பது அதிகமாகி வருகிறது.
அப்படிப்பட்டவர்களுக்கு, ‘ஸ்மார்ட் பீம்’ லேசர் கருவி கச்சிதமாக இருக்கும். இக்கருவியிலுள்ள லேசர் கதிர், படங்களை துல்லியமாகவும், பிரகாசமாகவும் காட்டுவதால், திரைப்பட அரங்கில் கிடைக்கும் அதே அனுபவம், வீட்டிலும் கிடைக்கும் என்கிறது, ‘ஸ்மார்ட் பீம்’ இணையதளம். ஆனால், விலை தான் கச்சிதமாக இல்லை. 57 ஆயிரம் ரூபாய்.