சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சியோமியின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்ற பெருமையும் கொண்டுள்ளது. புதிய சியோமி Mi A1 ஸ்மார்ட்போனின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட், பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1
– 3080 எம்ஏஎச் பேட்டரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் Mi A1 ஸ்மார்ட்போன் Mi.com தளத்திலும், ஆஃப்லைன் விற்பனையாளர்களான யுனிவர்செல் பூர்விகா உள்ளிட்டோரிடம் விற்பனை செய்யப்படுகிறது.