குமரன்

கோவாவில் இந்து முறைப்படி நடந்த சமந்தா – நாக சைதன்யா திருமணம்

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது. உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் தெலுங்கில் ‘ஏம் மாய சேஸாவே’ என்ற பெயரில் ...

Read More »

அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஓய்வு!

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜான் ஹாஸ்டிங்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 31 வயதாகும் ஹாஸ்டிங்ஸ் 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அதேமாதம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். 2012-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான ஹாஸ்டிங்ஸ்க்கு அதுதான் முதலும் கடைசியுமான டெஸ்ட் ஆகும். தற்போது டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ஒருநாள் ...

Read More »

அவுஸ்ரேலிய சாரதிகள் கவனத்திற்கு!

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு கூறியுள்ளது.

Read More »

தேர்தலில் போட்டியிடுவதற்கு காரணம் இதுதான்!

தெற்கு அவுஸ்ரேலிய மாநில தேர்தலில் நிக் செனாஃபோன் அணித் தலைவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கிழக்கு அடிலெய்டின் ஹார்ட்லி தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; ஒரு ஒக்ஸிஜன் தொட்டி இல்லாமல் எவரெஸ்ட் மலை மேல் ஏறுவதைப் போன்று இந்தத் தேர்தல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என கூறினார். அத்துடன் தனது சொந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மக்கள் தொகை தொடர்ந்த்தும் குறைந்து வரும் நிலையே இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு தூண்டியது என்றார். ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர்.

Read More »

ரசிகர்களுக்கு நாளை 3டி விருந்து அளிக்கும் `2.0′ படக்குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பல் உருவாகி வரும் `2.0′ படக்குழுவில் இருந்து ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி ...

Read More »

நான்கு மொழிகளில் நித்யா மேனன் நடிக்கும் ப்ரண!

நித்யா மேனன் நடிப்பில் அவரது அடுத்த படமாக, விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் மலையாளத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் நித்யா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்திற்கு ;ப்ரண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். இவருடைய டைரக்சனில் ஏற்கனவே கன்னடத்தில் ஐடோன்ட்ல ஐது மற்றும் மலையாளத்தில் பாப்பின்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், இப்போது மூன்றாவது ...

Read More »

மின்சார மயமாகும் கார்கள்!

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஜெனரல் மோட்டார்ஸ், விரைவில் மின்சார கார்களை மட்டுமே தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அமெரிக்க நிறுவனம், கடந்த, 100 ஆண்டுகளாக, பெட்ரோலிய வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்தது. 2016ல் மட்டும், உலகெங்கும் ஒரு கோடி பெட்ரோலிய வாகனங்களை அது விற்பனை செய்துள்ளது. இந்த வகையில், காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. எனவே, 2023க்குள் எல்லா பெட்ரோலிய வாகன உற்பத்திகளையும் நிறுத்திவிடப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, 2018ல் இரண்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அவுஸ்ரேலி ய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஜொலிக்கும் வித விதமான பூக்கள்!

அவுஸ்ரேலியாவில் குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் தொடங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த அவுஸ்திரேலிய அரசு ஆண்டு தோறும் மிகவும் அழகான பூந்தோட்டங்களை உருவாக்கி வித விதமான பூக்களை மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் அவுஸ்திரேலிய தலைநகரமான காம்பராவில் மக்கள் பார்ப்பதற்காக பல லட்சக்கணக்கான பூ மரங்களை நாட்டி உள்ளார்கள். இந்த நிகழ்வு கடந்த மாதம் 16 ஆம் திகதியில் இருந்து இந்தமாதம் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அவுஸ்திரேலியாவின் ...

Read More »