குமரன்

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்!

ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் தாமதமின்றி நடக்கும் என  அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கத்துடன்  கடந்த காலங்களில் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வெவ்வேறு நாட்களில் மாகாணசபை தேர்தல்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் இந்த பாராம்பரியத்தினை மாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளிற்கான தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறும் முடிந்தால் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலையும் கூட ஒரே நாளில் நடத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடி நாட்டின் பொதுச்சேவையில் ...

Read More »

மத்திய வங்கி மோசடி 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம்!

1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இந்த விடயங்கள் தெரியவந்தன. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை ...

Read More »

முதல் பார்வை: மாரி 2

சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே ‘மாரி 2’. சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது. ...

Read More »

ஹரி சீனிவாசன்: பெருநோய்த் தடமழித்த பெருந்தகை

தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய மருத்துவ ஆளுமைகளில் ஒருவர் அவர். ஆனால், மருத்துவர் ஹரி சீனிவாசன் என்ற பெயர் தமிழ்நாட்டில் பரிச்சயமான பெயர் அல்ல. அவருடைய மற்றொரு பரிமாணமான ‘எழுத்தாளர் சார்வாகன்’ அறியப்பட்டிருந்த அளவுக்குக்கூட ஹரி சீனிவாசனின் மருத்துவ சேவை வெளிச்சத்துக்கு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், அவருடைய சொந்த ஊரான, ஆரணியின் மக்களுக்குக்கூட அவருடைய அருமை பெருமைகள் தெரியாது. சார்வாகனின் எழுத்துகளைப் படித்த வாசகர்களிலும் பெரும்பாலானோருக்கு அவர் ஒரு மருத்துவர் என்ற விவரம் தெரியாது. யார் இந்த ஹரி சீனிவாசன்? சரி, யார் இந்த ...

Read More »

சிறந்த படங்களாக பரியேறும் பெருமாள், 96 தேர்வு!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார். சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 ...

Read More »

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் ...

Read More »

விரைவில் மீண்டும்  ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்! -மகிந்த

விரைவில் மீண்டும்  ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில்  உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது ஆசனங்கள் நிலையானவை என நம்பியிருக்க கூடாது நாங்கள் விரைவில் மீண்டும் ஆட்சியை கவிழ்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ...

Read More »

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன்!-சரத்பொன்சேகா

சிறிலங்கா ஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது காவல் துநை  விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். அத்துடன் நாமல் குமார ஒரு பைத்தியக்காரன் எனவும், என் மீது வீண் பழி சுமத்தி வருகின்றான் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கவனம் கொள்ள செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழ தம்பதியினர் நாடு கடத்தப்படும் அபாயம்!

அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான ஈழ தமிழ் குடும்பத்தின் வேண்டுகோளை மெல்பேர்ன் நீதிபதியொருவர் நிராகரித்துள்ளார் ஈழத்தைச் சேர்ந்த நடேஸ் பிரியா தம்பதியினரின் வேண்டுகோளையே நீதிபதி நிராகரித்துள்ளார். வெள்ளிக்கிழமை நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி ஜோன் மிடில்டென் நான் இவர்களின் மனுவை நிராகரிக்கின்றேன் என  குறிப்பிட்டுள்ளார். எனினும் ஈழ தம்பதியினரை பெப்ரவரி நான்காம் திகதி வரை நாடு கடத்தவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈழத்தைச் சேர்ந்த நடேஸ் பிரியா தம்பதியினரை அவர்களின் இரு பெண் குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர். ...

Read More »

ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும்!

வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ...

Read More »