அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான ஈழ தமிழ் குடும்பத்தின் வேண்டுகோளை மெல்பேர்ன் நீதிபதியொருவர் நிராகரித்துள்ளார்
ஈழத்தைச் சேர்ந்த நடேஸ் பிரியா தம்பதியினரின் வேண்டுகோளையே நீதிபதி நிராகரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி ஜோன் மிடில்டென் நான் இவர்களின் மனுவை நிராகரிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஈழ தம்பதியினரை பெப்ரவரி நான்காம் திகதி வரை நாடு கடத்தவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈழத்தைச் சேர்ந்த நடேஸ் பிரியா தம்பதியினரை அவர்களின் இரு பெண் குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் குயின்ஸ்லாந்தில் நகரமொன்றில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் அவர்களை கைதுசெய்து முகாமில் அடைத்துள்ளனர்.
நடேஸ் பிரியா இருவரும் வெவ்வேறு படகுகளில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றதும் பின்னர் திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமைச்சர் பீட்டர் டட்டன் இலங்கை தம்பதியினர் திருப்பி அனுப்பபடுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என அவர்கள் குயின்ஸ்லாந்தில் வசித்த பகுதியை சேர்ந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
பீட்டர் டட்டனிற்கு இதற்கான அதிகாரம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டட்டன் இது தொடர்பில் அவுஸ்திரேலிய மக்களின் குரலை செவிமடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal