குமரன்

இந்தியாவில் சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மெகன் மார்க்லே விருப்பம்!

மும்பையை சேர்ந்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்துக்காக சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே விருப்பம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ...

Read More »

சரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்!

எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் போரில் இறந்தவர்களை நினைவு கூருவது, அவர் சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதென்பதெல்லாம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அலகுகள். ஆகவே நினைவேந்தலின் முக்கியத்துவத்தை தென்னிலங்கையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் வாராந்தோறும் ...

Read More »

முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம்!-செல்வரட்னம் சிறிதரன்

‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார்.  வகைதொகையின்றி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இருப்பவர்களில் சிவநேசனும் ஒருவர். அவர் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் ஒரு எறிகணை தாக்குதலில் பறிகொடுத்திருக்கின்றார். அந்த சம்பவத்தில் அவரும் படுகாயமடைந்தார். சிறிவந்த எறிகணையின் துண்டு ஒன்று வலது தொடையில் பாய்ந்து எலும்பை முறித்து, அந்தக் ...

Read More »

20வது அரசியலமைப்பு திருத்தம் முன்வரைவு அடுத்தவாரம்!

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இந்த முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த முன்வரைவினை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் அமைப்பின் பிரகாரம் அது முன்மொழியப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதனிடையே, 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான கருத்து கணிப்பை நடத்துவதற்கு அண்ணளவாக 4 மாதங்கள் தேவைப்படும் என, ஜேவியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! “காக்கா அண்ணன்” மௌன விரதம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ...

Read More »

நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு ஆதரவாக 1 லட்சம் கையெழுத்துக்கள்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ளனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாமெனக் கோரி ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை நடேசலிங்கம் – பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக Biloela-வில் வாழ்ந்து வந்தனர். அவர்களது Bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததை அடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் ...

Read More »

ரூ.5 கோடி செலவில் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம்!

5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெறும் இளவரசர் ஹாரி-மேகன் திருமண விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது. திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை யொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் ...

Read More »

ஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்!

ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது. இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் நடந்த தவறு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்காக நடாத்தப்படும் தேர்வில் பிழை இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. குடியுரிமைக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் அவ்வாறான ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானவை என இந்த வாரம் தேர்வு எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியானது, அவுஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை எவ்வளவு என்பதுதான். இதற்குரிய பதில்களாக 18 மில்லியன், 22 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவின் ...

Read More »

கரும்புள்ளித் தடம்! – பி.மாணிக்கவாசகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் கொண்டு ஒதுக்கி, ஒடுக்கிச் சுற்றி வளைத்து, அவர்கள் மீது ...

Read More »