20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இந்த முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த முன்வரைவினை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் அமைப்பின் பிரகாரம் அது முன்மொழியப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இதனிடையே, 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான கருத்து கணிப்பை நடத்துவதற்கு அண்ணளவாக 4 மாதங்கள் தேவைப்படும் என, ஜேவியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.