குமரன்

25 வயது வரை தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது!-ஏ.ஆர். ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக தெரிவித்தார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக தெரிவித்தார். “எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.. அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. “அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக ...

Read More »

சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை!

ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட அசம்பாவிதம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் சம்பவத்தில் பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றும் தீக்கிரையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை  காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. சுமார் 100 தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீயின் காரணமாக தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் உள்ள போத்தல்களும், பிற பொருட்களும் வெடித்துச் சிதறுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

Read More »

சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்!

‘சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை?’ இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிராஜ் மஷ்ஹூர். அவர் கேட்பது சரி. நாட்டின் மீயுயர் மன்றம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் அடுத்த கட்டம் அதில் எத்தனை பேர் சந்தர்ப்பவாதிகள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. எத்தனை பேரை விலைக்கு வாங்கலாம் என்பதுதான் யார் வெல்லக்கூடும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. இப்படிப் பார்த்தால் ஆட்சி மாற்றம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. பேரம் முடிந்தால் தான் ...

Read More »

சபை முதல்வராக தினேஸ் நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவரத்தனவை, சபை முதல்வராக நியமிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என, அரசாங்க ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More »

மைத்திரியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல்!- வி.ரி.தமிழ்மாறன்

பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.   அதன் முழுவடிவம் வருமாறு. 19ஆவது திருத்தத்தின் பின்னணி 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றது. ...

Read More »

தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை!

எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய ...

Read More »

மோடிக்கு புதிய தலையிடியைக் கொடுக்கும் ராஜபக்ச மீள்வருகை!

சீனா  மீது பற்றுக்கொண்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மாலைதீவில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதையடுத்து இந்தியா நிம்மதிப்பெருமூச்சு விட்டு நீண்ட நாட்கள் செல்லவில்லை, அதற்குள்ளாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்கள் கடும்போக்காளர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கின்றன. இது மோடி அரசாங்கத்துக்கு புதிய தலையிடியை கொடுக்கப்போகிறது.   பூகோளரீதியில் தமிழ்நாட்டுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் இலங்கையில் பாரிய கேந்திரமுக்கியத்துவ நலன்களை இந்தியா கொண்டிருக்கிறது.அந்த தீவில் குறிப்பாக, விடுதலை புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளில் இந்தியா பெருமளவில் முதலீடுகளைச் செய்திருக்கிறது.இலங்கையின் வடபகுதியில் ...

Read More »

5ஜி ஐபோன் வெளியீட்டு தகவல்!

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். தரப்பில் இருந்து 5ஜி சாதனம் குறித்த தகவல்கள் மர்மமாக இருந்து வந்த நிலையில் 5ஜி ஐபோன் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் ...

Read More »

ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி வகித்த கிராமத்துப் பெண்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கத்துக்கு இடையே பெண் கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றுக்காக பாடுபடும் கிராமத்துப் பெண் ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் மட்டும் பதவி வகித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை சமாளிக்கும் யுக்தி, அவசர உதவி எண்கள் ஆகியவற்றையும் ...

Read More »