குமரன்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை – டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர். இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் ...

Read More »

அமைச்சரவையில் பொன்சேகாவிற்கு இடமில்லை!

முன்னாள்  இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்குவதற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் சரத்பொன்சேகா இடம்பெறாத நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது ஐக்கியதேசிய கட்சியினர் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் சிறிசேன சரத்பொன்சேகாவை நியமிக்க மறுத்துள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்;பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுக்கின்றார் என  தகவல்கள் ...

Read More »

வடக்கு அபிவிருத்தி அமைச்சு ரணில் வசம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் உட்பட பல அமைச்சின் அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டார். இதனடிப்படையில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் உற்ற நண்பரை கொலை செய்த நபர்!

அவுஸ்திரேலியாவில் தனது உற்றநண்பனை படுகொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின், அடிலெய்ட்டிலிருந்து பெர்த்துக்கு வாகனத்தில் அழைத்துச்செல்லும் வழியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. விக்டோரிய மாநிலத்தை சேர்ந்த இந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் தடுப்புக்காவலில் வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தக்கொலைச்சம்பவம் கடந்த டிசெம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிலெய்ட்டை சேர்ந்த ஆப்கான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரும் அங்குள்ள ஆப்கான் ...

Read More »

அமீர்கான் நிகழ்ச்சிக்கு தடை விதித்த சீன பல்கலைக்கழகம்!

சீன பல்கலைக்கழகத்தில் அமீர்கான் நடித்த ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு தி்டீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ இந்தி படம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிக பொருட்செலவில் எடுத்த இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பு ஏற்று அமீர்கான் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் ...

Read More »

விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது. போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More »

துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை!

துருக்கியில் 2016-ம் ஆண்டில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ...

Read More »

20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணத்தை செய்யவுள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய முன்னணின் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாலிக் சமரவிக்குமார அமைச்சரவை  ஏற்றுக்கொள்ள முடியாது என முடிவு செய்துள்ளனர்.

Read More »

முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில்  காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு காவல் துறை  விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது   முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு காவல் துறை  விசேட அதிரடிப்படையினரால் நேற்று குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5  81  மில்லிமீட்டர் எறிகணை -01  81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் ...

Read More »

சீதக்காதி – சினிமா விமர்சனம்

திரைப்படம் சீதக்காதி நடிகர்கள் விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, மகேந்திரன், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் இசை கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு டி.கே. சரஸ்காந்த் இயக்கம் பாலாஜி தரணிதரன் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் அடுத்த படம். விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். இத்தோடு, விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் சேர்ந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ‘சீதக்காதி’. படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. ...

Read More »