குமரன்

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு!

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் 11 நாடாளுமன்றத் தொகுதிகள், பஞ்சாப் மாகாணத்தில் 11 சட்டசபை தொகுதிகள், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் 9 சட்டசபைதொகுதிகள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் தலா இரு சட்டசபை தொகுதிகள் ...

Read More »

பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம்! – பெண் இயக்குனர்கள்

‘மீ டூ’ இயக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என மும்பையில் பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை உலுக்கி வரும் இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு தனி குழு ஒன்றை நியமிக்கவுள்ளது. ...

Read More »

தகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை!

தகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை என்று டொனால்டு டிரம்ப் அறிவித்து இருப்பது இந்தியர்களுக்கு ஆறுதலாக உள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு நாட்டினரும் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பெற்றனர். ஆனால் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு எதிராக இருந்தார். அவர் அதிபராக தேர்தல் களத்தில் நின்றபோதே அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வேலை வழங்குவதை எதிர்த்து பிரசாரம் செய்தார். நான் ஆட்சிக்கு ...

Read More »

11 பேர் கடத்தல் விவகாரம் ! சட்டமா திணைக்களம் பச்சைக் கொடி!

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது. இதுவரையிலான விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் அகக்ப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான பல சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே சி.ஐ.டி. அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனிடையே இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ...

Read More »

இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்!

எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர் முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன!

ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் ...

Read More »

சின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது!-வைரமுத்து

பாடகி சின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து காணொளி பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் ...

Read More »

தன் குழந்தையைக் காப்பாற்ற போராடிய அவுஸ்திரேலிய தாய்!

ஆலங்கட்டி மழையில் தன் குழந்தையைக் காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் புயல் தாக்கியது. அத்தோடு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மணிக்கு 144 கிமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியுள்ளது. குயின்ஸ்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் என்பவர் புயலின்போது தன் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடி உடைந்து குழந்தையுடன் ...

Read More »

போர்க்காலத்திலும் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்தார்!-மைத்திரி

வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு காடுகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் உள்ள காடுகளில் வடக்கு காடுகளே அடர்த்தி கூடியதாக காணப்படுகின்றது. அங்கு முப்பது வருடங்களாக போர் நடந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், காடுகளை அழியாமல் பாதுகாத்திருப்பதாகவும் மைத்திரி தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் பிறந்தநாளின்போது, கேக் வெட்டாமல் மரங்களை நடுங்கள் எனவும் மரங்களை மற்றவர்களு்ககு ...

Read More »

இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம்!-ரஞ்சித் மத்தும

இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம் எனத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும். அதுவரை கூட்டரசாங்கம் இணைந்தே செயற்படும் என்றார்.   மேலும் எதிர்தரப்பினர் தம்மை பாதுகாத்துக் கொள்ளவே இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனரே தவிர பொதுநல நோக்கம் ஏதும் கிடையாது. தற்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற பல பாரிய மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையில்  பலர் காணப்படுகின்றனர். வெகுவிரைவில்  ...

Read More »