அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அரசாங்கம் அறிவிக்கவேண்டுமென அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொறீசியஸ், கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் தமிழ் மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்படுவது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
Read More »குமரன்
ஹவாய் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்
ஹவாய் நிறுவனம் அதன் புதிய டூயல் கேமரா ஸ்மார்ட்போனான ஹானர் 6எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 24ம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கைப்பேசி மூன்று வகைகளில் வருகிறது. அதாவது, 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 999 (சுமார் ரூ.9,900) விலையிலும், 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 1,299 (சுமார் ரூ.12,900) விலையிலும், 3ஜிபி ரேம், உள்ளடங்கிய சேமிப்பு வகை ...
Read More »கணவரை பிரிய தனுஷ் காரணமா?
கணவர் ஏ.எல்.விஜயை பிரிய தனுஷ் காரணம் என்று கூறப்பட்டதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். அமலாபால் அவரது கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் தனுஷ் என்று முன்பு புரளி கிளம்பியது. இதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்… “ நானும் என் கணவர் விஜய்யும் விவாகரத்து கேட்டு பிரிந்ததற்கு காரணம் தனுஷ் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. இந்த விஷயத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானும் விஜய்யும் பிரிய முடிவு செய்ததை அறிந்த தனுஷ் ...
Read More »இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் – ஸ்மித்
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று அவுஸ்ரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு அவுஸ்ரேலியா அணியின் கப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இந்தியா தொடரில் இந்த அணியின் முக்கிய குழுதான் பங்கேற்க போகிறது. எங்கள் அணியின் சிலர்தான் ...
Read More »மெல்போர்னில் தமிழர் விளையாட்டு விழா
ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 வீரர்களின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” இன்று (8) மெல்போர்னில் நடக்கிறது. ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 பேரின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” ஜனவரி மாதம் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிழக்கு புர்வுட் ரிசர்வ் (East Burwood Reserve) மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், ...
Read More »மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 7ஆம் ஆண்டு வணக்க நாள்
2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார். ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது. யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு ...
Read More »இந்தோனேசிய இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ளும் திட்டதை அவுஸ்ரேலியா மறுப்பு
இந்தோனேசியாவின் ஆகச் சிறந்த இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ள,அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துவருவதாகக் வெளிவந்த குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவுஸ்ரேலியா வுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் இருப்பதாக, அவுஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் Marise Payne கூறினார். அந்த விவகாரத்தை ஆஸ்திரேலியா கடுமையாகப் பார்ப்பதாக அவர் சொன்னார். இந்தோனேசியாவின் கொள்கைகளை அவமதிக்கும் வகையிலான குறிப்புகள், அவுஸ்ரேலிய சிறப்புப் படைகளுக்கான தளத்தில், பயிற்சி ஆவணங்களில் இருந்ததாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, அவுஸ்ரேலியாவுடனான அனைத்து ராணுவ ஒத்துழைப்பையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Read More »2017-ல் ஏழு ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்கும் நோக்கியா, இந்த ஆண்டு மொத்தம் ஏழு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு களமிறங்குவது உறுதி செய்யப்பட்ட போதும் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்ற ரீதியில் நோக்கியா நலம் விரும்பிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா சார்பில் ஐந்து ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கசிந்துள்ள தகவலில் நோக்கியா பெயரில் மொத்தம் ஏழு ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆணட்ராய்டு இயங்குதளம் கொண்டு ...
Read More »பழைய காலத்து காதலே உயர்வானது
“செல்போன், வாட்ஸ்-அப் வசதி இல்லாத பழைய காலத்து காதலே உயர்வானது” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- “இந்த காலத்து காதல் செல்போன்-வாட்ஸ்அப் யுகத்துக்கு மாறி, காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை எனது தந்தை கமல்ஹாசன் சொல்லி கேள்விப்பட்டபோது வியப்பாக இருந்தது. போன் வசதி இல்லாத அந்த காலத்து காதலர்கள் சந்தித்து பேசுவது சுலபமானதாக இருக்கவில்லை. ...
Read More »அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட்
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா 538 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (58 ரன்), யூனிஸ்கான் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal