குமரன்

அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு!

சிங்கப்பூர் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின்  மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச்  சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு. ...

Read More »

பாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன?

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார். பாகிஸ்தானில் நிம்மதியாக, ...

Read More »

பொதுத்தேர்தலே ஒரேவழி என்கிறார் பசில் ராஜபக்ச!

பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேட்டியொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தவறான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள பசில் பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே இந்த நிலையேற்றபட்டது எனவும் தெரிவித்துள்ளார்.. முதலாவது தீர்மானம் ஜனாதிபதிக்கு சவால் விடும் ...

Read More »

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த இரண்டுவாரங்களாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாங்கள் ஏனையவிடயங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் கூடிய விரைவில இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார் இதன் காரணமாக ஜனாதிபதி சபாநாயகரை நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற ...

Read More »

வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள இங்கிலாந்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆளுங்கட்சி மந்திரிகளிடையே  இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கைக்கு அங்கு அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியில், ‘பிரிக்ஸிட்’ என அழைக்கப்படுகிற அந்த நடவடிக்கையை கவனித்து வந்த மந்திரி டொமினிக் ராப், அந்த துறைக்கான ராஜாங்க மந்திரி சூயல்லா உள்பட 4 மந்திரிகள் அடுத்தடுத்து நேற்று முன்தினம் பதவி விலகினர். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இந்த வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற ...

Read More »

நாடாளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை!

சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு  கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்கள் உள்ளார்கள். எம்மூன்று ...

Read More »

தேடல் வரலாற்றை நீக்கலாம்!

இணைய நிறுவனங்கள் தகவல்களைத் திரட்டுவது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில் தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகள் தங்கள் தேடல் வரலாறுத் தொடர்பான தகவல்களை நீக்குவதை எளிதாக்கி இருக்கிறது. தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகளின் தேடல் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்து, சேமித்து வைக்கிறது. பயனாளிகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளை அளிக்கவும், அவர்கள் தேடல் விருப்பங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை அளிக்கவும் கூகுள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒருவரின் தேடல் வரலாறு முழுவதையும் கூகுள் சேமித்து வைக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களோடு இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்று ...

Read More »

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது!

சட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுக்கப்பட்டனர். இவ்வாறு தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் ஓகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாக ...

Read More »

சபரிமலைக்கு செல்ல இவ்வளவு ஆர்வம் ஏன்?-தஸ்லிமா நஸ்ரின்

சபரி மலைக்கு செல்வதற்கு பெண் ஆர்வலர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? என்று வங்கதேச எழுத்தாளர்  தஸ்லிமா நஸ்ரின் கேள்வி எழுப்பியுள்ளார் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் திகதி ஐப்பசி ...

Read More »

ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி!

மோரிஸ், இங்கிடி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி தொடர்கிறது. ஏற்கெனவே கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலிய அணி 4-வதாக இந்தப் போட்டியிலும் தோற்றுள்ளது. ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 6 போட்டிகளிலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சும் மிக மோசமாக அமைந்துள்ளது. அடுத்த வாரம் இந்திய ...

Read More »