குமரன்

சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள்!-டிரம்ப்

அப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் ...

Read More »

அக்டோபரில் வெளியாகும் மைக்ரோசாஃப்ட் சாதனம்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாதனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதிய சர்ஃபேஸ் சாதனம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 2-ம் திகதி நடைபெற இருக்கிறது. நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய சர்ஃபேஸ் நோட்புக் மாடல்களுக்கு புதிய சர்ஃபேஸ் ப்ரோ மற்ரும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் டிஸ்ப்ளே கொண்ட ...

Read More »

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவா? பஷிலா?

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவா?, பஷில் ராஜபக்ஷவா? அல்லது வேறு யாருமா? என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலை பொது எதிரணிக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களின் விருப்பினை பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும். ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பாக தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் இரண்டு ...

Read More »

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் Bryce Hutchesson யாழ் மாவட்ட பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல தர்ஷன கெட்டியாராச்சியை நேற்று (07) சந்தித்தார். யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான தொடர்பாடல் பற்றியும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவற்கு செய்ய வேண்டிய வழிவகைகள பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

Read More »

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்!

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும் மாறி­வி­டக்­கூ­டாது என­வும் அவர் தெரி­வித்துள்ளார். பிரச்­சி­னை­கள் சூழ்ந்த நிலை­யில் நகர்கிறது தமி­ழர்­க­ளின் வாழ்வு மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்­போது, ...

Read More »

எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல….!

தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் நேற்று(7)அவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: டிரம்பின் ஆலோசகர் கைது!

லண்டன் பப் ஒன்றில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து கருத்து தெரிவித்து அதுகுறித்த விசாரணைக்கு வித்திட்ட டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. 31 வயதாகும் ஜார்ஜ் பாபுடோபுலஸ் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தான் பொய்யால் தவறிழைத்த “தேசப்பற்றுள்ள அமெரிக்கர்” என்று தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யாவுக்காக தான் பேச்சுவார்த்தை நடத்திய நேரங்கள் குறித்து எஃப்பிஐ-யிடம் பொய் கூறுவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது குறித்த விசாரணையில் கைது ...

Read More »

தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் போரிட்டே மரணடைந்தனராம்!- பொன்சேகா

இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு இறந்தார்கள் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது” என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார். இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இறுதிப் போரின் உயிர்ச் சேதங்கள் குறித்தும் பேசினார். ...

Read More »

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்!

‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. என்னமோ ...

Read More »

காப்புறுதி முகாமையாளரை இனந்தெரியாத நபர்கள் கடத்தி சென்று தாக்கி பணம் கொள்ளை!

கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பேருந்தில் இருந்து  வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த தேவை காரணமாக சென்றுவிட்டு வரும்போது நேற்று அதிகாலை ஆகிவிட்டது. பேருந்தில் ...

Read More »