மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார். இன்று அவர் மருத்துவகிசிச்சை ...
Read More »குமரன்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை மோசம் !
கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை ஆபத்தாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய பின்னரே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சீனி குறைந்து வருவதாகவும் இந்நிலை தொடர்ந்ததால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் உடனடியாக வைத்தியாசாலையில் அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதற்கு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை ...
Read More »தாக்குதல்கள் குறித்த உண்மைகளை மறைக்க முயற்சி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ...
Read More »விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரினால், மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கப்படும். இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் ...
Read More »கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்! – துருக்கி அதிபர்
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் திகதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது. இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ...
Read More »கௌரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா!
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படம். இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார். ரன்வீரின் மனைவியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசப்பட்டது. சிறு வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்தார். இந்நிலையில் ரூ.13 கோடி ...
Read More »நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை ?
1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பிரசாரங்களின் பிரதான இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இறுதியில் ஒரு முப்பது வருடகால போருக்கும் வழிவகுத்தது. அந்த போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு உண்மையில் மதிப்பிடமுடியாததாகும். தமிழர் பிரச்சினை இப்போது அதன் தாக்கத்தை இழந்து வாக்காளர்களைக் கவருவதற்கு தென்னிலங்கையில் பயன்படுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது. என்றாலும்கூட, குறிப்பிட்ட சில ‘ அரசியல் ஹீரோக்கள் ‘ தமிழர் பிரச்சினைக்கு புத்துயிர் கொடுக்க ...
Read More »சின்னம்மை நோய்க்கு நிகரான ஒருவகை வைரஸ் காய்ச்சல்!
இலங்கையிலுள்ள சிறார்களுக்கு சின்னம்மை நோய்க்கு நிகரான ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாய், கை மற்றும் கால்களில், நீர் தன்மையான கொப்புளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகள் என்பன ஏற்படும் என, அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், காய்ச்சல் ஏற்பட்ட சிறார்களை பாடசாலைக்கோ அல்லது முன்பள்ளிகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்றும், சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை ...
Read More »ஷாபி விவகாரம் : முறைப்பாடளித்த தாய்மாருக்கு பரிசோதனை!
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் நேற்று வரை 758 பேரின் வாக்கு மூலங்களை விசாரணைகளை முன்னெடுக்கும் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். கருத்தடை விவகாரத்தால் தாம் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடளித்துள்ள பெண்களில் 601 பேர், மகப்பேற்று மற்றும் பிரசவ விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேர் உள்ளிட்ட 758 பேரின் வாக்கு மூலங்களே இவ்வாறு பதிவு செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
Read More »அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன்!
பட விழாவில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார். யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல விஷயங்களை நாம் செய்ய முயற்சி ...
Read More »
Eelamurasu Australia Online News Portal