பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படம்.
இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார். ரன்வீரின் மனைவியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசப்பட்டது. சிறு வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்தார்.
இந்நிலையில் ரூ.13 கோடி வரை இந்த படத்துக்கு சம்பளமாக தர பட நிறுவனம் தீபிகாவை கேட்டுள்ளதாக தெரிகிறது. சில நிமிடங்கள் வரும் காட்சிக்கு இத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதால் தீபிகா சம்மதிப்பார் என்கிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal