கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகளையும், கிரிக்கெட் வீரர்களையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ...
Read More »குமரன்
விடுதலைப்புலிகள் போன்றதொரு இராணுவம் மீண்டும் வராது!
புலிகள் அமைப்பு போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் உருவாகாதென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார். தலவத்துகொடவில் நேற்று (12) நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், தற்போது நாட்டிலிருக்கும் சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்வதாகவும், இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சகலரும் சட்டத்தை மீறியே செயற்பாட்டுள்ளனர் எனவும் சாடினார். அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களிலிருந்து குற்றச்செயல்கள், மோசடிகள் தொடர்பான விடயங்கள் பல நழுவச் செய்யப்படுவதாகவும், சகல விதமான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவகங்களிலும் ...
Read More »பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம்!
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவு செய்யப்பட்டு பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ள போதும் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனங்களும், கொள்கைத்திட்ட வெளியீடுகளும் இடம்பெறாத நிலையில் அவசரமான தீர்மானங்களை கூட்டமைப்பு எடுக்காது எனச் சுட்டிக்காட்டிய சம்பந்தன் களமிறங்கிய வேட்பாளர்கள் யாரும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்குரிய உத்தியோக பூர்வமான அணுகுமுறைகளை ...
Read More »கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 1 லட்சம்பேர் வெளியேற்றம்!
கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்று தீ பெருமளவில் பரவியது. மணிக்கு 800 ஏக்கர் காட்டுப்பகுதியை தீ சாம்பலாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர். ...
Read More »தாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ரேச்சல், நடக்க முடியாமல் திணறுவதை பார்த்த மெக்டெர்மொட், அவருக்கு தன்னுடைய காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்த முதல் அறிமுகத்தில் இருவரும் பல விடயங்களை பற்றி ...
Read More »பெளத்த மேலாண்மை!
நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிஸாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிஸார் மீதும் சட்ட ...
Read More »ஹாலிவுட் நடிகைக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!
’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’ என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு ஐஸ்வர்யா ராய் குரல் கொடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் ’இருவர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சின்ன இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் ’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’. இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞன்!
அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தங்கியிருந்த அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற் கொலை என கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது சடலத்தை அடையாளம் காண காவல் துறை நிலையத்திற்கு அழைத்து ...
Read More »காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?
வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள் வியாக எழுந்து நிற்கின்றது. அதாவது மிக முக்கியமாக மூன்று கட்சிகளிலிருந்தும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் இந்த காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக் கப்போகின்றனர் என்பதே இங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ...
Read More »இரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய ஆணைக்குழு விஜயம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன் தினம் (11.10.2019) இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இரணைதீவு பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவந்ததன் அடிப்படையில் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இரணைதீவு மக்களுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal