குமரன்

கொழும்பில் 32 வெளிநாட்டவர்கள் பலி!

கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தாக்குதலை நடத்தியவர் இவரா?

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த நபரே தனது பையில்கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் குறித்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக காவல் தறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிக்கு சரமாரி கத்திக்குத்து!

தாய்லாந்தில் இளம்பெண்ணின் ஆடையை களைய முயன்றவரிடம் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 43 வயதான வெய்ன் மார்க்ஸ் என்பவர், தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று வெய்ன் மார்க்ஸ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் மதுக்கடை ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த சானி இன்ராராங் (30), நேரடியாக ஒரு பெண்ணிடம் சென்று மேலாடையை கழற்றி தருமாறு வற்புறுத்தியுள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், சிறிது நேரம் ...

Read More »

பத்தாவது மே பதினெட்டை எப்படி நினைவு கூரலாம்?

பத்தாவது மே பதினெட்டு இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடும். ஜெனீவாவை எப்படி தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் மே பதினெட்டை நினைவுகூரும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நினைவு கூர்தலை யார் ஏற்பாடு செய்வது? எப்படிச் செய்வது? என்பவை தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அவ்வாறு ஒரு பொது உடன்பாடு எட்டப்படாமைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம்- நினைவுகூர்தல் என்றால் என்ன என்பது தொடர்பில் ஓர் ஒருமித்த கருத்து ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இல்லை. இரண்டாவது காரணம்- ...

Read More »

உறியடி 2 -விமர்சனம்!

நடிகர் விஜய் குமார் நடிகை விஸ்மயா இயக்குனர் விஜய் குமார் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு பிரவீன் குமார் திரைப்பட போக்கு... வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார். அந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் ...

Read More »

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை!

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர். இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் ...

Read More »

இரண்டு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் குண்டு வெடிப்பு!

சிநிலங்காவில்  இரண்டு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு இடங்களில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள ஆலயம் ஒன்றிலும், நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. முதற்கட்டமாக 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  

Read More »

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

02 ஆம் இணைப்பு இன்று ஆறு இடங்களில் நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 102 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6  இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவல் துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி  ​தேவாலயம்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  

Read More »

அவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி!

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது. அங்கிருந்து எப்படி வெளியேறுவது எனத் திக்குமுக்காடிய நேரத்தில், அற்புதமான யோசனை அவர்களுக்குத் தோன்றியது. உதவி நாட HELP எனும் வார்த்தையை அவர்கள் சேற்றில் செதுக்கினர். அதன் அருகில் இருந்த பகுதியில் தீ மூட்டினர். அந்தச் செயல் பலன் தந்தது. அந்த வழியே பறந்து சென்ற தேடல், மீட்பு விமானம், அந்த ...

Read More »

பெண்மையை போற்றும் தமிழர்!

நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம். பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு ...

Read More »