குமரன்

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 8 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது சிராஜ்!

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக முகமது சிராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார். இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவாஜா, குர்ட்டிஸ் பேட்டர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேட்டர்சன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் வந்த ...

Read More »

பிரேசிலில் 200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து!

பிரேசில் நாட்டில் உள்ள 200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இதில் பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட பிறநாடுகளின் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் ஞாயிறு இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு ...

Read More »

புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்!

பல படங்களில் பிசியாக நடித்து வரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்று முதல் புதிய உறுதி ஒன்றை எடுத்துள்ளார். இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஐயங்கரன், ஜெயில், வாட்ச்மேன், 4 ஜி, அடங்காதே, 100% காதல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆலை மூடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு ...

Read More »

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்!

மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் ...

Read More »

அவுஸ்திரேலிய காவல் துறையின் அதிர்ச்சித் தகவல்!

பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான சிறிலங்கா இளைஞன் குறித்து அவுஸ்திரேலிய காவல் துறையினர் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர். குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதனை உறுதி செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், காவல் துறை நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கைதான இளைஞன் ...

Read More »

“எப்போ வேணா கைது செய்வாங்கன்னு வீட்லயே உட்கார்ந்திருக்கேன்!” -திவ்ய பாரதி

ஓகி புயல் குறித்த சரியான அறிவுப்பு இல்லை. புயல் பாதித்த பின்னர் தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. புயல் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சரியாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டி மக்களிடம் இருந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய பேரழிவு என, கடந்த ஆண்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்பைக் கூறலாம். `இந்தப் புயல் குறித்த சரியான அறிவிப்பு இல்லை. புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. பாதிப்புகள் குறித்து மக்களிடம் சரியாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை’ ...

Read More »

அமெரிக்காவில் தொலைக்காட்சி நடிகை சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைக்காட்சி நடிகையொருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வனோசா மார்க்வெஸ் என்ற நடிகையின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இடம்பெற்ற சம்பவமொன்றின் போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 49 வயதான நடிகை வாடகை வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் வீட்டின் உரிமையாளரின் அழைப்பினை தொடர்ந்து காவல்துறையினர் நடிகையின் வீட்டிற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அங்கு சென்ற வேளை நடிகை உடல்ரீதியாக மிகவும் பாதிக்கப்ட்ட நிலையில் காணப்பட்டார்,அவர் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் திடீரென தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ...

Read More »

வலம்புரி பத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்!

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடாக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக பதிவு செய்கின்றது. நேற்றைய தினமான சனிக்கிழமை யாழ்.நகரில் வைத்து பத்திற்கும் குறைவான நபர்களை கொண்ட சிறு அணியொன்று யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின்,  நேற்றைய பதிப்பின் மாதிரியினை தீக்கிரையாக்கியுள்ளது. யுத்தம் அதனால் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மாறி மீண்டும் நட்புறவு பூக்கள் பூத்துவிடுமென்ற நம்பிக்கையினை மத ...

Read More »

விக்னேஸ்வரன் மனக் குழப்பத்திலுள்ளார்!- எம்.ஏ.சுமந்திரன்

மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தே கேட்ட மேற்கண்டவாறு கூறிய அவர், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. இந் நிலையில் முதலமைச்சர் உரையாற்றும்போது ...

Read More »

தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம்!

முல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற நில அப­க­ரிப்பு மற்­றும் சிங்­க­ளக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்­கான தமிழ் மக்­கள் கட்சி பேத­மின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ள­னர். முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தென அர­ச­த­லை­வர் தெரி­வித்­துள்ள நிலை­யி­லும், இந்­தப் போராட்­டம் நடந்து முடிந்­துள்­ளது. தெற்­கின் பல பிர­தே­சங்­கள் மகா­வலி கங்­கை­யின் நீரால் செழிப்­பு­டன் காணப்­ப­டு­கின்­றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்­ப­தால் மூன்­று­போக நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இத­னால் விவ­சா­யி­கள் அதிக வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­கின்ற னர். அநு­ரா­த­புர மாவட்­டத்­தின் வறட்­சி­யான பகு­தி­கள் பச்­சைப் பசே­லெ­னக் காணப்­ப­டு­வ­தற்கு மகா­வலி நீரே ...

Read More »