குமரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை:மக்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்படுகின்றது என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கான நிதிவழங்கல் செயற்பாடும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிவாரண சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது. அரச அரச ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் குறித்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.   இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ பரவிவரும் ...

Read More »

ரஷ்யாவிலும் பரவுகிறது மீடூ இயக்கம்!

இந்தியா, சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் மீடூ இயக்கம் பரவி வரும் நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ‘மீடூ’ ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் மோசமான அனுபவங்களை இந்த ஹேஷ்டேக் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த இயக்கம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருந்த பிரபலங்களின் முகத்திரைகள் ...

Read More »

அலெக்சா சேவையில் ஸ்கைப் வசதி!

அமேசான் நிறுவனத்தின் குரல் வழி உதவியாளர் சேவையான அலெக்சாவுடன் மைக்ரோசாப்டின் ஸ்கைப் சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசானின் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்கள் வாயிலாக ஸ்கைப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்கைப் ஆடியோ, காணொளி  அழைப்புகள் தவிர மொபைல், லேண்ட்லைன் போன்களுக்கும் பேச முடியும். அலெக்ஸா பயனாளிகள் செட்டிங்ஸ் பகுதியில் சென்று இந்த வசதியை ஒருங்கிணைத்து இயக்கிக்கொள்ளலாம். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலெக்ஸா குரல் வழி உதவியாளர் சேவையில் பிரத்யேக வசதிகளை உருவாக்கிக்கொள்வதற்காக ஸ்கில் புளுபிரிண்ட் வசதியையும் அமேசான் ...

Read More »

அவுஸ்திரேலியக் கரையில் செத்து மடிந்த 28 உயிர்கள்!

அஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கரையில் ஒதுங்கிய 28 திமிங்கிலங்கள், உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.  இந்தச் சம்பவம் நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரயிறுதியில், நியூசிலந்தின் சிறு தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கியுள்ளன. தனியார் விமானத்தைச் செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர், குரோஜிங்கோலோங் தேசியப் பூங்காவில் (Croajingolong National Park) ஒதுங்கிய 27 பைலட் வகைத் திமிங்கிலங்கள், ஒரு ஹம்ப்பேக் வகைத் திமிங்கிலம் ஆகியவற்றைக் அவதானித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை விமானி, இந்த திமிங்கிலங்ககை ...

Read More »

தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்திய பேரறிஞர்!

நேர்மையான அதிகாரி, இலக்கியத்துக்கும் அறிவியலுக்கும் மைய நீரோட்ட பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்த முன்னோடி இதழாளர், தமிழ் எழுத்து வடிவத்தின் வரலாற்றையும் சிந்துச் சமவெளி எழுத்துகளையும் பற்றிய ஆராய்ச்சிக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட ஆய்வாளர் என்று பன்முக ஆளுமையாக விளங்கியவர் ஐராவதம் மகாதேவன். தான் பங்கெடுத்துக்கொண்ட ஒவ்வொரு துறையிலும் தனது முன்னோடித் தடங்களைப் பதித்த அவரின் மறைவு தமிழியலுக்கு மட்டுமல்ல, இந்தியவியலுக்கும் பேரிழப்பு! 27 ஆண்டு காலம் ஆட்சிப்பணித் துறையில் மத்திய – மாநில அரசுகளின் முக்கியப் பொறுப்புகளை வகித்த ஐராவதம் மகாதேவன் நேர்மைக்கும் ...

Read More »

சாதனை படைக்குமா ’லயன் கிங்’ ரீமேக்?

’லயன் கிங்’ – 1994-ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. கார்ட்டூன் எனப்படுகிற 2டி அனிமேஷன் படமாக வெளியானது. அந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டத்தைப் பெற்றது. 2 ஆஸ்கர்களை வென்றது. நாயகன் சிம்பாவின் நண்பர்கள் டிமொன், பும்பா இருவருக்குமான தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உருவானது. ’லயன் கிங்’ பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மத்தியில் ஹகுனா மடாடா (ஆப்ரிக்க மொழி வாசகம், ’கவலை இல்லை’ என்று ...

Read More »

மதம் பாகிஸ்தானை ஒற்றுமைப்படுத்தும் என்று சொன்னார்கள் அப்படி நடக்கவில்லை!- ஃபர்சானா ஷேக்

“எதற்கு எதிராக இருக்கிறோம் என்று பாகிஸ்தானுக்குத் தெரியும். ஆனால், எதற்காக இருக்கிறோம் என்பதுதான் அதைத் தெளிவற்ற நிலையில் வைத்திருக்கிறது” என்கிறார் கராச்சியில் பிறந்து இன்று லண்டனில் வசிக்கும் வரலாற்றாசிரியர் ஃபர்சானா ஷேக். பாகிஸ்தானைப் புரிந்துகொள்ள ஒரு புத்தகத்தையும் (மேக்கிங் சென்ஸ் ஆஃப் பாகிஸ்தான்) அவர் எழுதியிருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல். பாகிஸ்தானில் நடப்பவற்றிலிருந்து எதைப் புரிந்துகொள்வது? மத நிந்தனை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஆசியா பீபியை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்தது; மதத் தீவிரவாதிகளுக்குப் பணிய மாட்டேன் என்று பிரதமர் இம்ரான் கானும் அறிவித்தார்; ...

Read More »

சுவீடன் நாட்டில் கட்டிடம் மீது மோதிய ஏர் இந்தியா விமானம் – 179 பயணிகள் உயிர் தப்பினர்!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 179 பயணிகள் உயிர் தப்பினர். சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டது. பிறகு அந்த விமானத்தை சற்று வேகமாக விமானி இயக்கினார். அப்போது விமானம் சற்று விலகி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த விமானத்தில் அயர்ந்து தூங்கிய விமானி!

ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்தபோது விமானி அயர்ந்து தூங்கியதால் விமானம் தரை இறங்காமல் 46 கி.மீ. தூரம் பறந்து சென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவில் வோர்டெக்ஸ் ஏர் நிறுவனத்தை சேர்ந்த பைப்பர் பிஏ-31 ரக சரக்கு விமானம் டேவான் போர்ட் நகரில் இருந்து கிங் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். ஆட்டோ பைலட் முறையில் விமானம் இயங்கி கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானி தன்னையும் அறியாமல் நன்றாக தூங்கி விட்டார். எனவே, விமானம் கிங் தீவில் தரை ...

Read More »