இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது. நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் – ராகுல், முரளி விஜய் நீக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் கே எல் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனால் தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ...
Read More »முல்லைத்தீவில் கடும் மழை! வயல் நிலங்கள் சேதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்யும் கன மழைகாரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் காணப்படும், மொத்தம் 9679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 குளங்கள் ஆபத்தான நிலையிலுமுள்ளதுடன், ஒரு நீர்ப்பாசன வாய்க்காலும் சேதமடைந்துள்ளது. மேலும் ஒலுமடு கமக்கார அமைப்பிற்குட்பட்ட 675 ஏக்கர் வயல் நிலங்களும், முள்ளியவளை கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் 750 ஏக்கர் வயல் நிலங்கள், ஒட்டுசுட்டான் ...
Read More »மொழிபெயர்க்கத் தொடங்கும்போது தஸ்தயேவ்ஸ்கி எனக்குள் கூடுபாய்ந்துவிடுவார்! – எம்.ஏ.சுசீலா
170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் பல ஆயிரம் பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் எம்.ஏ.சுசீலா. தஸ்தயேவ்ஸ்கியின் சில கதைகள், குறுநாவல்கள் எனச் சொற்பமான எழுத்துகளை வைத்தே நாம் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’, ‘இரட்டையர்’ என அவரது பேரிலக்கியங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தருவதற்காகத் தன் பேராசிரியப் பணிக்குப் பின்பான ஓய்வுகாலத்தை அர்ப்பணித்துக்கொண்ட சுசீலாவின் பணி போற்றுதலுக்குரியது. ‘அசடன்’ நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதைக் கொண்டாடும் விதமாக ...
Read More »மெல்போர்னில் சதம் அல்லது இரட்டை சதத்திற்கு வாய்ப்புள்ளது!-ரகானே
முதல் இரண்டு டெஸ்டிலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரகானே, மெல்போர்னில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு டெஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரகானே அரைசதம் அடித்தார். அடிலெய்டில் 2-வது இன்னிங்சிலும், பெர்த்தில் முதல் இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். அவரால் அரைசதத்தை சதமாக ...
Read More »பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?
படுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் நிறப் புகை பெரும் கருமேகமாகி நாட்டின் மேல் பரவுகிறது. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ… இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’ பிரிவினைக் கலவரங்களின் ரத்தச்சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் ...
Read More »கே.பி எனும் அபூர்வராகம்!
தமிழ் சினிமாவில், இயக்குநர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்! எம்.ஜி.ஆர். சிவாஜிகளின் புகழில் குளிர்காயவில்லை. தன் கதையையும் நல்ல கதையையும் மட்டுமே நம்பினார். அடுத்த தலைமுறைக்கு அதாவது எம்.ஜி.ஆர். சிவாஜி இடத்துக்கு இரண்டு பேரை உருவாக்கியவர் அவர். எனக்குத் தெரிந்து கட்டுப்பெட்டியாக அடைக்கப்பட்டு வெளியே வந்த பெண்களை, அச்சு அசலாக வார்த்துக் காட்டியது பாலசந்தர் படங்களே! எல்லோரும் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தபோது இவர் ...
Read More »இசைக்குள் உயிர்ப்பலி வாங்கிய சுனாமி!
இந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. ...
Read More »கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்பட வில்லை!
நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்பட வில்லை.தற்போது அச்சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டியுள்ளது.இது ஜனநாயத்திற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல விளைவாகும் என்று அரச நிறுவனங்கள்,மலைநாட்டு உரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் பதவியேற்றபின் கண்டிக்கு விஜயம் செய்த அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின் மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண வாரியப்பொல ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள,அஸ்கிரிய பீட மகாநாயகத் தேரர் வண வரகாகொட ஞானரத்ன ஆகியோரை ...
Read More »வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு!
வடக்கில், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெய்ந்த கனமழையை அடுத்து, ஏற்பட்ட வௌ்ளத்தினால், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More »
Eelamurasu Australia Online News Portal