தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் ...
Read More »குமரன்
ஊடகவியலாளரை காவல் துறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு !
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை காவல் துறை விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் காவல் துறை அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் காவல் துறை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த ...
Read More »கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயற்சி!
முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துவெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவி;த்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தார். 2002 பெப்ரவரி 27 ...
Read More »நியூஸிலாந்தின் வைட் தீவிலிருந்து ஆறு சடலங்கள் மீட்பு!
நியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, வெடிப்பில் சிக்குண்ட 6 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் இன்றைய தினம் மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்து கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிமாலையானது மீண்டும் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள படையினர், மீட்பு பணிகளை முமமுரமாக ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த எரிமலை வெடிப்பின்போது அவுஸ்திரேலியாவைச் ...
Read More »போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்!
பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ...
Read More »இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தால் இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரின்போதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க்-பாலில் விளையாட மறுத்துவிட்டது. தற்போது முதல்முறையாக வங்காளதேச அணிக்கெதிராக பிங்க்-பால் பகல் இரவு ஆட்டத்தில் விளையாடியது. இதனால் 2020 – 2021 தொடரின்போது இந்தியா பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என நம்புகிறது. மேலும் நான்கு ...
Read More »காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்!
நடிகை காஜல் அகர்வால் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இந்த வருடம் அவரது நடிப்பில் வந்த கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தணிக்கை குழு கெடுபிடியால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காஜல் ...
Read More »நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 248/4
பெர்த்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் லாபஸ்சாக்னேயின் சதத்தால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. டேவிட் வார்னர் – ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த லாபஸ்சாக்னே நிதானமாக விளையாட ஸ்டீவ் ...
Read More »காதுகளைக் கொஞ்சம் பெரிதாக்குவோம்!
புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தேர்தல் முறை ...
Read More »திடீரென கோடீஸ்வரனாக மாறிய இளைஞர்!
அவுஸ்திரேலியாவில் இளைஞருக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். சிட்னியை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் நேற்று காலை தூங்கி எழுந்தார், பின்னர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய லொட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது, நீங்கள் கோடீஸ்வரர் ஆக்விட்டீர்கள் என கூறினார்கள். இதை முதலில் நம்பாத இளைஞர் ஓன்லையில் அது குறித்து பார்த்த போது அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு பெரிய அளவிலான பரிசு பணம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal