கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ...
Read More »குமரன்
விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது!
ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு; கேள்வி:- தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமையொன்று அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே மாற்றுத்தலைமை என்ற சொற்பதத்தினை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. எமது முன்னணி மட்டும் தான், போர் நிறைவடைந்ததன் ...
Read More »வடக்கு ஆளுநரை சந்தித்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் வடமாகாணத்தின் நீர் பிரச்சனை, அதனை தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘வடமராட்சி களப்பு’ திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. இதேவேளை இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு உள்நுழைய முயற்சிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் ...
Read More »மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா!
ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ...
Read More »தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்!
பாகிஸ்தானில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் லண்டன் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு, இருவரும் நலமாக உள்ளனர். பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. குழந்தைகளின் மண்டையோடு, மூளை மற்றும் இரத்த நாளங்கள் என மிகவும் இக்கட்டான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டுள்ளனர். இதனால் குழந்தைகள் இப்போது நலமாக உள்ளனர். ...
Read More »ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு!
ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற இந்திய மாணவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞர் போஷிக் சர்மா. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தங்கி அங்குள்ள பல்கலைகழம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சர்மாவும் அவரது நண்பர்களும் இணைந்து விக்டோரியா மாகாணத்தின் மேரிஸ்விலி பகுதியில் உள்ள பொழுதுபோக்கு விடுதிக்குச் சென்றனர். அந்த பொழுதுபோக்கு விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது சர்மாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ...
Read More »கன்னியா கோயிலுக்கு வழிபட சென்றோருக்கு தடை!
திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு பௌர்ணமி தினமான் இன்று (16) வழிபடச் சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கன்னியா பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு தவத்திரு அடிகளார் தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக கூறி, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை காவல் துறையினர் கையளித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் காவல் துறையினருகும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்போது, கன்னியா பிள்ளையார் ...
Read More »ஓமந்தையில் 7 மிதிவெடிகள் மீட்பு!
வவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதிவெடிகளை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன இதையடுத்து இத்தகவலை காவல் துறையால் காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...
Read More »கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும்!
மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது. இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து விமர்சித்துவரும், தீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று ...
Read More »ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் குஷ்பு, மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளார். தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. சின்னத்தம்பி, அண்ணாமலை, பாண்டியன், சிங்காரவேலன் என வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்து அரசியலிலும் களம் இறங்கினார். தற்போது காங்கிரசின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று டுவிட்டரில் பகிர்ந்த ஒரு பதிவில் மீண்டும் படங்களில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal