குமரன்

ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். “இந்த விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கொள்கைகள் எதுவும் மாறவில்லை என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசு வட்டார தகவல்கள் படி, தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் கீழ் 4,500 ஆப்கானியர்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்றனர்.

Read More »

நடிகர் அபிஷேக் பச்சனுக்கு அறுவை சிகிச்சை

பிரபல பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்தில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது அபிஷேக் பச்சனுக்கு அறுவை ...

Read More »

ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, இல்லையா?

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை(27) அறிக்கை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்குப் பிறகு, 30 ஆம் திகதிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளை அதுபோல் சுகாதார பழக்கவழக்கங்களை 100 வீதம் பின்பற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் புதிய நோயாளிகள் தோன்றுவதைத் தடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அசேல ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான குழுவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அவர்களின் விடுதலை பிணை வழங்குவது மற்றும் விசாரணைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கும் ஆலோசனை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஆலோசனை குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி அசோக்க சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்,

Read More »

மங்கள சமரவீர காலமானார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.

Read More »

வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்?

பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந்நாட்களில் இவர் எப்படி உண்மைகளை ...

Read More »

ஆப்கானிஸ்தானை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை காக்க வேண்டியது எங்களின் கடமை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் சென்றது. இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ...

Read More »

‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10 திரையரங்குகளில் வெளியாகும்

திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். தற்போது ...

Read More »

சமூக சேவகருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி.யின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் இந்த அழைப்பினை எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்கள் குறித்து சி.ஐ.டி சிறப்பு விசாரணையைத் தொடங்கியதால், உண்மையை விசாரிக்க இளைஞர் சி.ஐ.டி.க்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குறித்த நபர் காலி, ...

Read More »

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவருமான கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார். திடீர் சுகயீனமடைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் ஆஜரானவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவும் நீதி வேண்டி, அயராது பாடுபட்டவர். சட்டத்துறையில் பல நுணுக்கங்களை திறம்பட வெளிப்படுத்திய சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பாரிய இழப்பாகும்.

Read More »