2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சி.ஐ.டி.யின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் இந்த அழைப்பினை எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்கள் குறித்து சி.ஐ.டி சிறப்பு விசாரணையைத் தொடங்கியதால், உண்மையை விசாரிக்க இளைஞர் சி.ஐ.டி.க்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 4.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த நபர் காலி, ஹினிதும பகுதியில் வசிப்பவர் ஆவார் அவர் கத்தோலிக்க கவுன்சில் உறுப்பினராகவும் சமூக சேவகராகவும் பணியாற்றுகிறார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் தொடர்பு இருப்பதாகவும், எனவே இது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்முகநூலில் கூறியிருந்தார்