குமரன்

பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா?

உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என அவர் கூறியிருந்தார். அவரது அந்த வேலை நிறுத்தம் காரணமாக, ...

Read More »

உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை!- ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம்

உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 2006-ம் ஆண்டு உயிரணுக்கள் தானம் செய்துள்ளார். இதன்மூலம், பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையிலான நட்பு முறிந்தது. எனினும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில், அந்த ஆணின் பெயர் ‘பெற்றோர்’ என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அந்த குழந்தையும் அவரை ‘டாடி’ என்றே அழைத்துள்ளது. இந்நிலையில், அவருடனான ...

Read More »

ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்!

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் முனைப்பு ...

Read More »

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு!

துருக்கி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்புள்ளது. இந்த கொலை தொடர்பாக ஐ.நா. சபை சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது. இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ...

Read More »

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் -பிரமிப்பூட்டும் காட்சி

ஆஸ்திரேலியாவில் கடல் அலையைப் போல மோதிய மேகக்கூட்டத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் கடந்த 11ம் தேதி பவுல் மெக்கல்லி என்பவர் வரப்பு அருகே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவர் சற்று வானை பார்த்தார். அப்போது திடீரென ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி தென்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே இதனை புகைப்படம் எடுத்துள்ளார். வானில் மேகங்கள் தண்ணீரைப் போல காட்சி அளித்துள்ளது. இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் ...

Read More »

கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரை துறைமுக நகர்!

கொழும்பு துறைமுக நகரை போன்று கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரையில் துறைமுக நகர் ஒன்றினை சர்வதேச முதலீட்டில் உருவாக்கவுள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நா்டாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், கடல் சூழல் பாதிப்பு என்ற விடயங்களை கூறி சிலர் மக்களை அச்சுறுத்தி குழப்பினர்.எனினும்   எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கடல் பரப்பில் இன்று 700 ஏக்கர் ...

Read More »

முஸ்லீம்கள் தொடர்பான பௌத்தமதகுருவின் ஆபத்தான கருத்து!

முஸ்லீம்களை கல்லால் அடிக்கவேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட ஞானரத்தன தேரர்வேண்டுகோள் விடுத்திருப்பதை கடுமையாக சாடியுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர இது பௌத்தத்தை தலிபான்மயப்படுத்தும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார். மற்றொரு மனிதனை கல்லால் அடித்துக்கொலை செய்யுமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை எந்த பௌத்தராலும் ஏற்றுக்கொள்ள முடியாது மதகுருமார்கள் அந்த வேண்டுகோளை விடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்பு சமாதானம் ஆகிய எங்கள் உயர்தத்துவத்தை தலிபான்மயப்படுத்தும் முயற்சிகளிற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். முஸ்லீம் கடைகளிற்கு செல்லாதீர்கள் அவர்கள் வழங்கும் ...

Read More »

2-வது திருமணம் செய்து கொண்டது ஏன்? – பிரகாஷ்ராஜ்

2-வது திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார். தந்தையர் தினத்தையொட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சொந்த வாழ்க்கையில் தந்தையின் பங்கு முக்கியம். எனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சுதந்திரம் கொடுத்தால் கெட்டுப்போவார்கள் என்ற பயம் பல பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் மீது நம்பிக்கை இல்லாதபோது பயம் வருகிறது. குழந்தைகளை பொறுப்பாக வளர்த்து அவர்கள் ஆசைகளை ...

Read More »

இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் ...

Read More »

வத்­தளை தமிழ் பாட­சாலை : ஜூலை 12 ஆம் திகதி அங்­கு­ரார்ப்­பணம்!

கம்­பஹா மாவட்ட வத்­தளை தமிழ் பாட­சாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை வத்­தளை ஹுணுபிட்­டி­யவில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­படும். நன்­கொ­டை­யா­ளர்கள் மாணிக்­க­வா­சகம் குடும்­பத்­தி­னரால் வழங்­கப்­பட்­டுள்ள காணியில் தற்­ச­மயம் இருக்கும் கட்­டி­டத்தில் வகுப்­புகள் ஆரம்­பிக்­கப்­படும். ரூபா. 78 மில்­லியன் மதிப்­பீட்டில் கட்­டப்­ப­ட­வுள்ள புதிய நான்கு மாடிப் பாட­சாலை கட்­டி­டத்­துக்­காக, முதற்­கட்­ட­மாக எனது அமைச்­சி­லி­ருந்து ரூபா 27 மில்­லியன் நிதி ஒதுக்­கீட்டை இன்று கையெ­ழுத்­திட்­டுள்ளேன். இதற்­கான அடிக்­கல்லும் அன்­றைய தினம் நாட்­டப்­பட்டு கட்­டிட பணிகள் ஆரம்­பித்து வைக்­கப்­படும் என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணி,-­ தமிழ் முற்­போக்கு ...

Read More »