ஊரடங்கு காலத்தில் புதிய விடயங்களை கற்றுக் கொண்டு, தம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். கொரோனாவைரஸ் தொற்று பரவலை கட்டபடுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கம் நேற்று இரவு முதல், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை காஜல்அகர்வால், 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் இதனை உபயோகமுள்ள நேரமாக மாற்றிக்கொள்ள தீர்மானித்திருக்கிறாராம். இதுகுறித்து ட்வீட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது… 21 நாட்கள் என்பது, பழைய பழக்க வழக்கங்களை மறந்து, புதிய ...
Read More »குமரன்
இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் காணப்படுமானால்….
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும். மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். *முடியுமான வரை நீங்கள் மட்டும் தனியாக இருப்பதற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். ...
Read More »துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
வீரகெட்டிய – வேகதவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீரகெட்டிய காவல் துறை பிரிவுக்குட்பட்ட வேதகல பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை துப்பாக்கி சூட்டினால் படுகாயமடைந்திருந்த நபரை வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக தங்கல்ல வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேகதவல பகுதியைச் சேர்ந்த ...
Read More »கொரோனாவால் இங்கிலாந்தில் மனைவியின் உயிருக்கு ஆபத்து!
கொரோனா வைரசால் நுரையீரல் பாதிப்பால் இங்கிலாந்தில் உள்ள தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து என்று நியூசிலாந்தில் சிக்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிதாபமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் வசித்து வரும் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நியூசிலாந்தில் சிக்கியுள்ளார். விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறார். நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ...
Read More »லாஸ்லியாவை நெகிழ வைத்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி நெகிழ வைத்திருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியாவிற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினார்கள். ...
Read More »சமூக பொறுப்புடன் உதவ விக்னேஸ்வரன் அழைப்பு!
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து இதுவரை நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன. இன்றும் சில சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி நின்றன. பொருள்களின் பற்றாக்குறை மற்றும் ...
Read More »இலங்கையில் கொரோனா.! எத்தனை பேர் பாதிப்பு..! – ஒரு கண்ணோட்டம்
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19 வைரஸ்)தொற்றால், பாதிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலையாகும் போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களுடன் இந்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்ததாகவும், அதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 99 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார். தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் தொற்றாளர்கள் 99 பேரில் இரு வைத்தியர்கள் உள்ளடங்கின்றமை இங்கு விஷேட அம்சமாகும். ...
Read More »கொரோனா வைரஸ் தாக்கம் : அவுஸ்திரேலியாவின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பெரும்பாளான பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தாலும் அந்த நாட்டின் சினிமா தியெட்டர்கள், விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளதால் தமது குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே இரவில் 149 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் இதுவரை ஆயிரத்து 886 ...
Read More »கொரோனா தீவிரமடைகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 35 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 554 பேர் ...
Read More »மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்!
கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அனைத்து நிவாரணங்களும் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும். இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி, நிதி நிறுவன மற்றும் வரி நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் வருமாறு, 1. ...
Read More »
Eelamurasu Australia Online News Portal