வீரகெட்டிய – வேகதவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீரகெட்டிய காவல் துறை பிரிவுக்குட்பட்ட வேதகல பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை துப்பாக்கி சூட்டினால் படுகாயமடைந்திருந்த நபரை வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக தங்கல்ல வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேகதவல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று காலை குறித்த நபரும் வேறு சிலருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த துப்பாகி பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வீரகெட்டிய காவல் துறை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				