தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More »தியாகி திலீபனின் தீர்ப்புக்காக யாழில் மக்கள் காத்திருப்பு
திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இன்று மீண்டும் கூடி நீதிமன்றத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி எடுக்கப்படும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். திலீபன் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில் அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் ...
Read More »20 ஆவது திருத்தம் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்
அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 41 ஆ ...
Read More »ஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 460 பைலட் திமிங்கலங்கள் கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கின. பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன. தகவல் அறிந்து திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதிக்கு விரைந்து சென்ற அரசு ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு ...
Read More »ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்திருந்தனர்!
ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர். பின்னர், ஜூன் 1 அன்று ஆஸ்திரேலியா நோக்கி 11 வியாட்நாமியர்களுடன் கிளம்பிய படகு ஒரு சில நாட்களிலேயே பழுதடைய ஆளில்லா தீவான Jaco தீவில் கரை ஒதுங்கியிருக்கின்றனர். அங்கு வெட்டவெளியிலேயே இரண்டு இரவுகளை கழித்து இவர்களை, கிழக்கு திமோர் நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழலினால் தீவு நாடான கிழக்கு திமோரியிலேயே இவர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ...
Read More »மறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்று இருப்பவர். இவரது நடிப்பு திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டுவது உண்டு. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்பு ஒரு டான்ஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின் சினிமாவில் நுழைந்து அவர் படிப்படியாக தன்னுடைய நடிப்பின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். ...
Read More »இந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா?
“தமிழ்த் தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்” என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உப தலைவரும் இணை பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அளித்த விசேட செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். அவரது செவ்வியின் முழு விவரம் வருமாறு, கேள்வி :- இந்தியாவை மீறி ...
Read More »என்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தான் மயக்கமடைந்தபோது அணிந்திருந்த ஆடைகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கூறுகையில், “ நான் ஒன்றில் மட்டும்தான் ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய ஆடைகள். நான் மயக்கமடைந்திருந்தபோது அணிந்திருந்த ஆடைகள் எனக்கு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ‘ஆகஸ்ட் 20 ஆம் தேதி அலெக்ஸி தங்கியிருந்த ஓட்டல் அறையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைத்தன. அதனை நாங்கள் ஜெர்மன் ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அதன் முடிவில் அலெக்ஸி நவால்னிக்கு ...
Read More »2020 நிகழ்வுகளை குறிக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம்
2020 ஆண்டின் நிகழ்வுகளை கச்சிதமாக எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 2020 ஆண்டு பற்றி யாரிடம் கேட்டாலும், இது மிகவும் மோசமான ஆண்டு என்றே கூறுவர். சமூக வலைதள டிரெண்டுகளும் 2020 பாதிப்புகளை குறிக்கும் வகையிலேயே இருக்கின்றன. இந்த ஆண்டு துவங்கியது முதல் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இந்த ஆண்டு தான் மிகவும் மோசமானது என அனைவரையும் சொல்ல வைக்கிறது. அந்த வகையில், 2020 ஆண்டில் அனைவரின் பொதுவான மன ஓட்டத்தை எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal