2020 நிகழ்வுகளை குறிக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம்

2020 ஆண்டின் நிகழ்வுகளை கச்சிதமாக எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

2020 ஆண்டு பற்றி யாரிடம் கேட்டாலும், இது மிகவும் மோசமான ஆண்டு என்றே கூறுவர். சமூக வலைதள டிரெண்டுகளும் 2020 பாதிப்புகளை குறிக்கும் வகையிலேயே இருக்கின்றன.

இந்த ஆண்டு துவங்கியது முதல் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இந்த ஆண்டு தான் மிகவும் மோசமானது என அனைவரையும் சொல்ல வைக்கிறது.
அந்த வகையில், 2020 ஆண்டில் அனைவரின் பொதுவான மன ஓட்டத்தை எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள. எனினும், புதிய எமோஜிக்களை பெற 2021 வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மொபைல் போன்களில் எமோஜிக்களை அனுமதிக்கும் யுனிகோட் கன்சார்டியம், ஐந்து புதிய எமோஜிக்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
புதிய எமோஜிக்கள்:  ஃபேஸ் இன் கிளவுட் – முகம் மேகத்தில் இருப்பதை குறிக்கும், ஃபேஸ் எக்சேலிங் – பெருமூச்சு விடுதல், அமைதி போன்றவற்றை குறிக்கும்,  ஃபேஸ் வித் ஸ்பைரல் ஐஸ் – குழப்பம், பிரச்சினை, ஐயோ போன்றவற்றை குறிக்கும், ஹார்ட் ஆன் ஃபையர் – 2020 ஆண்டில் ஒருவர் நினைத்தது, நிறைவேறாததை குறிக்கும், மென்டிங் ஹார்ட்- சூழல்களில் முன்னேற்றம் ஏற்படுவதை குறிக்கின்றன.
இந்த எமோஜிக்கள் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த சூழலிலும் பயன்படுத்த முடியும். இவை 2020 ஆண்டிற்காக உருவாக்கப்படவில்லை. எனினும், இவை இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்வுகளை நினைவில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.