மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் ...
Read More »குமரன்
அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு!
மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாங்குளம் காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத், அது தொடர்பில் காவற்துறையினர் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார், மனித எச்சங்கள் ...
Read More »ஆஸ்திரேலியா காட்டுத்தீ – 113 விலங்கினங்கள் அழிந்துவிடும் ஆபத்து!
ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை என்றும், அப்படி உதவி கிடைக்காவிட்டால் விலங்கினங்கள் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கோடை வெயில் காரணமாக அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீயில் கோலா கரடிகள் உள்ளிட்ட பல அரிய வகை வன உயிரினங்கள் செத்து மடிந்தன. பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் இந்த ...
Read More »ஒரே நாளில் 242 பேர் பலி – கொரோனா வைரஸ்!
சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ...
Read More »கணவரிடம் சித்ரவதைகள் அனுபவித்தேன் !- மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மீரா வாசுதேவன், கணவரிடம் சித்ரவதைகள் அனுபவித்ததாக கூறியிருக்கிறார். உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். ...
Read More »மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன. ...
Read More »இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ...
Read More »தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயினால் பலியானோர் எண்ணிக்கை சீனாவில் 1,113 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் ...
Read More »சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் – பத்திரிகையாளரிடம் சிஐடி விசாரணை!
சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இலங்கை குற்றப்புலானய்வு திணைக்களத்தினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் அனுரங்கி சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்ரியன் தொடர்பிலும் சுவிஸ் தூதரக விவகாரத்தில் அவருக்;கு இருக்ககூடிய தொடர்புகள் குறித்தும் பத்திரிகையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்றதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர். அனுரங்கி சிங் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More »மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனித புதை குழி!
மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறித்து மன்னார் காவல் துறை மன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த வழக்கு விசாரனை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ...
Read More »
Eelamurasu Australia Online News Portal