வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நோய் ...
Read More »குமரன்
ஆஸ்திரேலிய தொடர் ரத்தானால் பேரிழப்பு ஏற்படும்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய போட்டி தொடர் நடக்காமல் போனால் பேரிழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் லபுஸ் சேன் தெரிவித்தார். உலகையே நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் செப்டம்பர் 30-ந் தேதி வரை அந்த நாட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற ...
Read More »வெப் தொடரில் அறிமுகமாகும் ஜெய்
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். சமீபத்தில் இவரின் 25-வது படமான கேப்மாரி ரிலீசானது. இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி ...
Read More »இலங்கையில் கொரோனாவால் 9ஆவது மரணம் பதிவானது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ‘ஐடிஎச்’இல் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 197 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Read More »முள்ளியவளையில் மிதிவெடிகள் மீட்பு
முள்ளியவளை, 03 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது, போர் காலப்பகுதியில் நிலத்தில் புதையுண்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மிதிவெடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் மிதிவெடிகளை அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »யாழ். கொக்குவில் பகுதியில் கைக்குண்டு மீட்பு
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வீதியோரம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு இன்று காலை யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதி பகுதில் வைத்து மீட்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணம் காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Read More »கொரோனா அச்சத்திலும் அகதியை சீண்டும் அவுஸ்ரேலியா!
ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் இருந்த குர்து அகதி ஒருவர், தடுப்பு நிலைமைகளை முன்னேற்றும்படி போராட்டம் நடத்தியதற்காக வழக்கமான தடுப்பு மையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சியில் ஈடுபட்ட பர்ஹத் பந்தேஷ் எனும் அந்த அகதி, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் ஆறு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு, உடல் மற்றும் மனநல சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இவர், மெல்பேர்னில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த ஹோட்டல், தடுப்பிற்கான மாற்று இடமாக ...
Read More »சீன ஆய்வகத்திலிருந்து வந்ததுதான் கரோனா வைரஸ்-மைக் பாம்பியோ
சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்று பல வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவரை கரோனா வைரஸால் அந்நாட்டில் 11.88 லட்சம் பேர் ...
Read More »கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண் எங்கே?
கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண் ஷி ஜெங்லியாக, மர்மப்பெண்ணாகத்தான் உலகின் கண் முன்னால் இப்போது தோன்றுகிறார்.அந்தப் பெண்ணின் பெயர் வேண்டுமானால் ஷி ஜெங்லியாக இருக்கலாம். ஆனால் உலகம் அவரை ‘பேட் உமன்’ (வவ்வால் பெண்) என்றுதான் செல்லமாய் அழைக்கிறது. அவரை இந்த உலகமே இப்போது தேடிக்கொண்டிருக்கிறது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது இந்த வினாடி வரையில் மர்மமாகத்தான் இருக்கிறது. அவர் மர்மப்பெண்ணாகத்தான் உலகின் கண் முன்னால் இப்போது தோன்றுகிறார். இந்த ‘வவ்வால் பெண்’ சாதாரண பெண் அல்ல. ...
Read More »காலம் காலமாக காரணம் சொல்லும் கூட்டமைப்பு !
கலந்துரையாடல் ஒன்றுக்காக சிறிலங்கா பிரதமரினால், கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத தாம் ஏற்றுக்கொண்டமைக்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, 1. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது. 2. இப்பின்னணியில், பிரதமர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் கூட்டமொன்றிற்கு அழைத்துள்ளார். 3. ...
Read More »
Eelamurasu Australia Online News Portal