குமரன்

மீள்குடியேறி 10 வருடங்கள் கடந்தும் அடிப்படை வசதி இன்றி அவதியுறும் சோலை கிராம மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10  வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பராமுகமாகச் செயற் படுவதாகவும் மெசிடோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்ச்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பல்லவராயன் கட்டு சோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்திலிருந்து  வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ...

Read More »

மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டப்படி பயங்கரவாதிகளாக அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு

மசூத் அசார், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967-ன் கீழ், ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வழி இருந்தது. எனவே தனி நபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வழி செய்யும் வகையில் இந்த சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டது. இந்த புதிய சட்டப்படி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா தலைவர் ...

Read More »

மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஜோதிகா!

ராட்சசி படத்தை பார்த்து பாராட்டிய மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக்கிற்கு நன்றி தெரிவித்து நடிகை ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, அந்த படத்தில் கூறியது போல் தங்கள் நாட்டில் ...

Read More »

8652 கோடி ரூபா பண உதவியை இழந்த இலங்கை : மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்?

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ...

Read More »

தமிழ் குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படுவதை தடுத்தது நீதிமன்றம்!

இலங்கை தமிழ் தம்பதியினர் தொடர்பான வழக்கை  எதிர்வரும் 18 ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிபதி தமிழ் தம்பதியினரின் இரண்டாவது மகளிற்கு பாதுகாப்பு கோருவதற்கான உரிமையில்லை என்பதற்கான  மேலதிக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சரிற்கு உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 18 ம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி மொர்டெகாய் புரொம்பேர்க்  அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் நடேஸ் பிரியா தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்த முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 18 ம் திகதியே வழக்கின் இறுதி நாளாகயிருக்காது எனவும் ...

Read More »

கோண்டாவில் வீட்டில் புகுந்து வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!

கோண்டாவில் அந்நங்கைப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே வன்முறையில் ஈடுபட்டது. குறித்த நால்வரும் தமது முகங்களை மூடி கட்டி இருந்தார்கள் என வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.   வீட்டினுள் புகுந்து வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்த ...

Read More »

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு!

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இத்தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று காவல் துறையினர்  ...

Read More »

மாவை சேனாதிராஜா முன்பாக தொண்டர் தற்கொலை முயற்சி!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த சுமார் 800 வரையான சுகாதார தொண்டர்கள் நியமனம் வழங்கவிருந்த மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது ...

Read More »

தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்!

தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும், தொழிற்றுறையையும், கலைத் துறையையும் மிக மோசமானளவு  பின்னடைவுத் தளத்துக்குக் கொண்டுசென்று கொண்டிருக்கின்றன. காலத்துக்கு காலம், செயற்றிறனற்ற கொள்கைப் பரப்புரைகள் மூலமும் வாய்ச் சவாடல்கள் மூலமும் அரசியல் ஏமாற்று வித்தைகளைக் காட்டி, வாக்குப் பெற்று, சுயநல ...

Read More »

சிரியா போரில் குடும்பத்தினரை இழந்தானா இந்த சிறுவன்?

சிரியா போரில் குடும்பத்தினரை இழந்து, அண்டை நாட்டுக்கு சிறுவன் ஒருவன் இடம்பெயர்ந்ததாக பரவி வரும் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர். போர் காரணமாக ஏராளமான மக்கள் அந்நாட்டை ...

Read More »